‘விடிவிற்கு முந்தைய மரணங்கள்’

விடுதலைப் புலிகள் கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு தா. பாலகணேசன் எழுதிய குறுநாவல் விடிவிற்கு முந்தைய மரணங்கள்.  முதன் முறையாக நேரடிக் கள அனுபவங்களை கேட்டு, அதன் அடிப்படையில் உருவான குறுநாவல். அண்மையில் ஷோபா சக்தியுடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது அது ஒரு முதலாவது ஆக்கம் என்றார். இனித் தான் அதை வாசிக்கப் போகிறேன். அண்மையில் இக்குறுநாவலை மீளப் பதிப்பிருக்கிறார்கள். பிரான்சில் கிடைக்கும். இலங்கையில் எப்படியென்று கேட்க வேண்டும்.

இன்று மதியம் தர்முபிரசாத் அழைத்து, “பாலகணேசன் அண்ணை வாறார் பாஸ், கையில வாழ்க்கைகுத் திரும்புதலும் கொடிறோசும் தான் இருக்கிறது. கொடுக்கப் போகிறேன் என்றார்”. நான் “ஒரு படமும் எடுத்து விடுங்கோ பாஸ்” என அன்புக் கட்டளையிட்டேன். 

சற்று நேரத்தில் படம் வந்தது. ஒரு கணம் காலம் குழம்பியிருந்தது போன்ற படம். பின்னால் ஒரு பெரிய சைஸ் பிரபாகரனின் படம். அதற்கு மேலே ஒரு புலிப்பொம்மை, பிரபாகரனுக்கு முன்னால் சிரித்தபடி போரின் முதல் குறுநாவலை எழுதியவருக்கு புத்தகங்களைக் கொடுக்கிறார் தூய அழகியல்வாதியான தர்மு பிரசாத். அபரிமிதமான குறும்புடன் சிரிக்கும் அவர்களுக்கும் அவர்களுக்குப் பின்னாலிருக்கும் இன்னொரு காலத்திற்கும் இந்தப் பக்கமிருந்து என்ன ரியாக்சன் கொடுப்பதென்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இலக்கியம் விந்தையானது. காலத்தை ஒரு கார்ட்ஸ் கட்டைப் போல விசிறி விளையாடுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *