“ஈழத்துப் புனைவிலக்கியத்தின் அடிப்படையான போதாமையென்பது, அதற்கு திரண்ட வரலாற்று நோக்கோ, அதிலிருந்து பிறந்து வரும் தரிசனமோ இல்லை என்பது தான். நம் மொத்த புனைவுலகும் வரலாற்றின் அடுக்குகளை புனைவில் அடுக்கி ஒன்றிலிருந்து இன்னொன்றினூடாக வடிகட்டி அதன் செறிவும் தூயதுமான வடிவத்தை அடைய இதுவரை முடிந்திருக்கவில்லை, அல்லது முயற்சி கூட செய்திருக்கவில்லை.

தர்மு பிரசாத்தின் முதற் குறுநாவலான சிறகையில் இந்த அடுக்குகளின் இடையே கல்லிடுக்கில் நீரென வரலாறும் தரிசனமும் வழிந்து செல்லத் தொடங்கியிருந்தது. வண்ணச் சீறடியில் அது தன் துல்லியமான ஊற்றைக் கண்டடைந்து விட்டிருக்கிறது. அடுத்த புனைவுகளை நோக்கி பெரும் எதிர்ப்பார்ப்புகளை கிளர்த்தியெழச் செய்திருக்கிறது. ஒரு ஊற்றிலிருந்து பெருக்கும், பெருக்கிலிருந்து கடலுமென விரியக் காத்திருக்கும் எழுத்தாளரின் அழுத்தமான வண்ணச் சீறடியை இந்த நாவல் தாங்கிக் கொண்டிருக்கிறது”
கிரிசாந்
பின்னட்டைக் குறிப்பு


