“என்னுடைய இரண்டாவது நாவலான ’தோறை’ செப்டெம்பர் 2026 இல் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து வெளியாகின்றது. இவ்வருடத் தொடக்கத்தில் இந் நாவலை எழுதி முடித்திருந்தேன். முதல் நாவலான நகுலாத்தைக்கும் தோறைக்குமான பயணம் என்னளவில் முக்கியமானது. ஒரு எழுத்தாளரின் இரண்டாவது நாவல் என்பது அவர் எந்தச் சாட்டும் சொல்ல முடியாதபடிக்கு நாவலாக ஆகி இருக்க வேண்டும். இந்நாவலை எழுதும் போதும் சீரமைக்கும் போதும் அடைந்த உணர்வுகளும் புனைவில் வாழும் அனுபவமும் வாழ்வு மீதான பற்றுதலையும் நம்பிக்கையையும் செறிவாக்கியபடியே இருந்தது. பயில்வும் களமும் ஒன்றாக நிகழ்ந்தது. நாவல் என்ற சமகாலத்தின் முதன்மையான இலக்கிய வடிவம் பற்றிய நானே சந்தித்துத் தெரிந்து கொண்ட விடயங்கள் நற்பேறு என்றே சொல்வேன்”
யதார்த்தன்
தோறை நாவல் பற்றிய அறிவிப்பு – யதார்த்தன்


