நோக்கின்மை

உலகத்தை நோக்குவதை நிறுத்திக் கொள்வது அல்லது வரைமுறைப்படுத்திக் கொள்வது இன்றுள்ள ஒருவர் செய்து கொள்ள வேண்டியது. எண்ணுக்கணகற்று இறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வசவுகளிற்கும் எதிர்மறையான சொற்களுக்கும் வெறுப்பிற்கும் துயரங்களுக்கும் அரசியல் சிக்கல்களுக்கும் இடையில் ஒருவர் தன்னைத் தான் நோக்கி வாழ்வை நிகரறிந்து வாழ்வதே பெருஞ் சவாலாய் ஆகியிருக்கிறது. உலகின் பொதுப்பார்வை வட்டம் இன்று சமூக வலைத்தளங்களால் வடிவமைக்கப்படுகிறது. எது நீதி எது அநீதியென ஆளுக்கொரு கோர்ட் தரப்புக்கு நான்கு லோயர்களென கொதிகலன்கள் …

பவளக்கொடி

வாழ்க்கையைப் போல இவ்வளவு பின்னல்கள் கொண்ட கதையை எந்த எழுத்தாளராலும் எழுத முடியாது என்ற உண்மையைச் சந்திரன் டெய்லருக்கு நான் நூற்றியெட்டாவது முறையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். கூர்மையில் கிளி போன்றதும் அகலத்தில் கறி மிளகாய் போன்றதுமான அவரது மூக்கில் மூக்குக் கண்ணாடி அரைவாசிக்கும் கீழே வழுக்கியிருந்தது. இடையிலிருந்த யன்னல் அளவு இடைவெளியால் சந்திரன் டெய்லர் என்னை நிமிர்ந்து பார்த்த பின்னர் நூற்றியெட்டு முறையும் அளித்த அதே பதிலை தையல் மெசினைக் …

அனார் : சில குறிப்புகள்

உணர்வுக்குள்ளே மலையும் வனமும் பிரபஞ்சவெளியும் உண்டு! அனார், அச்சிறு கண்களின் வழி என்னுலகத்தை நிரப்பி அள்ளிக்கொடுக்கும் தாய்மையின் கருணை. தன்னைக் கண்டடைதலின் பிரகாரம் வாழ்வில் ருசிகொண்டவோர் மந்திரப்பேழை. கவிதையின் மொழிகளுக்குள் தழைத்து வாழ்வென்றாகியிருக்கும் இவ் உயிரைத் தூக்கிச்சுமக்கும் துணிவையும், தைரியத்தையும் தன் எழுத்துக்களின் வழி சேர்ப்பித்த என் மூத்தவருக்கு வாழ்த்துக்களும், நன்றியும், அன்பு முத்தங்களும். எத்தனையாயிரம் பாடுகளைக் கொண்டலையும் வாழ்விது. அனாரின் கண்கள் வழி நானடையும் கனவென்பது மொழியில் திளைத்து …

ஷோபா சக்தி : உரையாடல்

தன்னறம் விருதுகளின் போது விருது பெறுபவர்களின் நேர்காணல் வெளியாவதுண்டு. அவை அந்த எழுத்தாளுமையின் குரலில் அவரது வாழ்வைக் குறுக்கும் நெடுக்குமாய் விபரிப்பது போன்றவை. இவ்வருடம் விருது பெற்ற ஈழத்து எழுத்தாளர், நடிகர் ஷோபா சக்தியுடன் தன்னறம் குழுவினரின் நேர்காணல்.

குறுந்தொகை : ஜெயமோகன் உரை

ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள் நூல் சங்க இலக்கியத்தை வாசிக்கும் புனைவெழுத்தாளனின் நுண்மையான தொடுகையிலிருந்து பிறந்தது. சங்க இலக்கியம் ஒரு புதையல் சுரங்கம் போன்றது. அதற்கு மரபான வாசிப்பு இலக்கண வரம்புகளாலான ஒற்றைப் பெரும் வாயிலைக் கொண்டிருந்தது. நவீன எழுத்தாளர்கள் அதைச் சுகிப்பதற்கான பல வாயில்களை உண்டாக்கினர். ஜெயமோகனின் பார்வைக் கோணம் அன்றாட வாழ்விலிருந்து சங்கக் கவிதைகளை அணுகுவது. ஒரு தியானப் பயிற்சியின் போது நுண்சொல் போலக் கவிதையை ஏற்றுக் கொள்வது. …

கடத்தல் முயற்சி

கிளிநொச்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை நேற்றைய தினம் கிளிநொச்சியில் வைத்து வான் ஒன்றினுள் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் அவர் தப்பித்திருந்தாலும் கடத்தல் முயற்சியின் போது தாக்கப்பட்டும் இருப்பதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சமூகப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து ஊடகவியல் பணியிலும் அதற்கு வெளியிலும் கூடத் துணிச்சலுடன் செயற்படுபவர். அவருடன் சமூகமாக நாம் உடனிருப்பது அறம்.

தீக்குடுக்கை : புத்தகச் சந்தை

எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘தீக்குடுக்கை’ நாவல் சென்னை புத்தகச் சந்தையில் கிடைக்கவிருக்கிறது. அனோஜனின் மூன்று சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பின்னர் வெளிவரும் முதல் நாவல். அனோஜனுக்கு வாழ்த்துகள். சென்னை புத்தகக் கண்காட்சி ~ 2025 சால்ட் பதிப்பகம் வெளியீடு- 1 தீக்குடுக்கை ( நாவல் )

தன்னறம் விழா : இடமாற்றம்

ஷோபா சக்திக்கான தன்னற இலக்கிய விருது விழா நிகழ்வு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நாள்: 28 டிசம்பர் 2024நேரம்: காலை 10 மணிஇடம் : நெல்லிவாசல் மலை கிராமம்

தன்னறம் விருது : ஷோபா சக்தி

“இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும். வெறுப்பையும் பகையுணர்ச்சியையும் கழுவித் துடைக்கும். என்னுடைய நண்பர்கள் வாழ்க்கையைக் குறித்துப் புகார் சொல்லும் போதெல்லாம், நான் அவர்களுக்கு இலக்கிய வாசிப்பையே பரிந்துரைக்கிறேன். உங்களது நெற்றிக்கு நேரே துப்பாக்கி பிடிக்கப்பட்டிருக்கும் போது, கடவுளை நினைக்காதீர்கள்! மனைவி பிள்ளைகளை நினைக்காதீர்கள்! …