அந்தந்த நாள்களின் நற்குணங்களால்…
கவிதைக்கு மிருதுவான தோல் வளர்ந்து மென்மயிர்கள் முளைத்த குட்டிப் பூனையாய் ஒரு குழந்தையின் கையிலிருப்பதைப் போல் தர்மினியிடம் கவிதை மொழி பயின்று வருகிறது. வாலை மெல்ல நேராக நிமிர்த்தியபடி கொட்டும் மழைக்குள்ளால் ஓடி, ஈரத்தை உதறிக்கொண்டே வெதுவெதுப்பைத் தேடிச்செல்லும் பூனையென மென்பஞ்சுத் தோலாடையின் மீது சாய்ந்து கொண்டே கணகணப்பூட்டிக் கொள்கிறது. கீழுள்ள இரண்டு கவிதைகளிலும் பயிலப்படும் மொழி தமிழ்க்கவிதைகளில் முக்கியமான ஒரு அடைவு. ஒரு குட்டிப் பூனையின் நேர்த்தி என்று …
