அ. முத்துலிங்கம் : நேர்காணல்

ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான அ. முத்துலிங்கம் அவர்களின் இந்த நேர்காணல் அவரது எழுத்துகளைப் பற்றியும் பார்வைகள் பற்றியும் சற்றே விரிவான தகவல்களை அளிக்கக் கூடியது. அவரது எழுத்துகளைப் போலவே நேர்காணலில் அவரது குரல் செறிவாக வெளிப்பட்டிருக்கிறது. ஆரம்ப நிலை இலக்கிய வாசகர்கள் மற்றும் புதிதாக எழுத வருபவர்கள் அவரின் எழுத்துகளை வாசிக்க இதுவோர் நல்ல தொடக்கம்.

பொலிக!

மானுடருக்கு கலையும் இலக்கியமும் எதை அளிப்பதற்காக மண் நிகழ்கின்றது என்பதும் எதன் பொருட்டு என்பதும் பல முதன்மையான கலைஞர்களால் சொல்லப்பட்டே வருவது. ஜெயமோகனே குறைந்தது ஆயிரம் உவமைகளால் சொல்லியிருப்பார். இன்று இந்தக் காணொலி இன்னொரு உவமையிலிருந்து தோன்றுவது. பொலிக என ஆணையிடுவது!

ஆகப் பெரிய கனவுகள்

கடந்த வருடம் தும்பி சிறார் இதழ்நிறுத்தப்பட்ட செய்தி வெளியாகிய போது அதன் பயணத்தைத் தொடருபவர்கள் அடைந்த இழப்புணர்வும் துக்கமும் தும்பி எனும் மகத்தான கனவினை நீங்குவதன் துயரே. இவ்வருடம் தும்பி இதழ் மீளவும் சித்திரை முதல் நாள் வெளிவரும் எனும் பெருமகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. தும்பி மீளவும் பறக்கும் என்பதை ஆழத்தில் ஒரு குரலாய் என்றும் அறிந்திருந்தேன் என எண்ணுகையில் வியப்பாயிருக்கிறது. மகத்தான கனவுகள் அப்படித் தான். பெருந்துயர்களை அடைந்து …

அந்த ஆறு நிமிடங்கள்

தன்னறம் விருது விழாவில் ஷோபா சக்தி ஆற்றிய தன்னுரை வெளியாகியிருக்கிறது. ஈழத் தமிழர்களில் எவரேனும் ஒருவர் அதைப் போன்ற ஒரு நன்றியுரையை வழங்க இயலுமா என எண்ணிப் பார்க்கிறேன். வாய்ப்பேயில்லை. அந்த ஆறு நிமிடங்களென்பவை ஷோபாவின் உலகில் அன்றாடங்கள். எங்கள் நிலத்தின் அசல் முகம்.

தினசரி வாழ்வின் கவித்துவம்

தேவதச்சனின் கவிதையுலகிற்குள் என்னால் நுழைந்து அதில் வாழ முடிவதில்லை. இன்னொரு உலகு என்ற எண்ணமே இப்போதுமிருக்கிறது. சபரிநாதனின் இந்த உரை தேவதச்சனின் கவிதையுலகை அதற்கு வெளியே இருப்பவர்களும் தொட்டு உணர்ந்து கொள்ளும் படி படர்கிறது. சபரி நிறையப் பேச வேண்டும் என எண்ணுகிறேன். கவிதைகளை அதன் ஆழங்களிலிருந்து ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இளம் எழுத்தாளர்களுக்கு

ஓர் இளம் எழுத்தாளனாக இலக்கியம் அளிக்கும் சவால்களை ஓயாது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது அறிதலின் இன்பம். எழுதுதலின் குன்றாத வேட்கை. ஜெயமோகனின் இந்தக் காணொலி இளம் எழுத்தாளர்கள் பற்றியிருக்கும் அவநம்பிக்கையையும் சலிப்பையும் அதிலிருந்து மீளும் வாசல்கள் பற்றிய திறப்புகளையும் சுட்டுவது. அறிதலும் காலமும் மாறிக்கொண்டேயிருப்பது. காலத்தைப் போலவே அறிதலும் ஒவ்வொரு நாளும் மேம்பட்டு மட்டுமே முன்னேறக் கூடியது. அண்மையில் வாசித்த கற்றலைப் பற்றிய ஜெயமோகனின் சில வரிகளும் இக்காணொலியின் சவால்களை …

அகவிழி : ஆவணப்படம்

அகவிழி ஆசிரியையான சரஸ்வதி அவர்கள் நான்கு வயதிலிருந்தே கண்பார்வை இல்லாதவர். சென்னை ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக, மேல்நிலை வகுப்பு (11 மற்றும் 12) மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலப் பாடம் போதிக்கிறார். பிரெய்ல் முறையில் கற்பிக்கும் அகவிழி ஆசிரியை இவர். தன் வாழ்வில் இதுகாறும் தான் கடந்தவந்த வாழ்வுச்சூழ்நிலைகள் குறித்தும், தனக்கும் தன் அம்மாவுக்குமான உறவு குறித்தும் அவர் பேசுவதனைத்தும் நம்மை நெகிழ்வில் …

வையம் : இதழ்

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வையம் இலக்கிய மாத இதழில் அவயமிழந்தவர்கள் பற்றிய கவிதைகளின் தொகுப்பு ஒன்று இம்மாத இதழில் வெளியாகியிருக்கிறது. எனது ‘தொடுகை’ என்ற கவிதை இதழின் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. சேரன், கருணாகரன், தீபச்செல்வன் ஆகியோரது கவிதைகளும்  வெளிவந்திருக்கின்றன.

கீதை : பேருரை

கீதைக்கான நாடகீயத் தருணத்தால் அது மதிப்பு மிக்கதாக ஒரு கலையாக்கத்தில் இடம்பெறுகிறது என்ற கருத்து முக்கியமானது. அரசியல் சரிநிலைகளுக்கு அப்பால் ஒரு நூலை அதன் வரலாற்று, தத்துவ, மெய்யியல் பார்வையில் வைத்து நோக்குவதும் முக்கியமானது. ஜெயமோகனின் இந்தப் பேருரைத் தொடர் கீதையை என்று மட்டுமல்ல. ஒரு நூலை புரிந்து கொள்வதற்கான பல வாயில்களையும் சாளரங்களையும் திறப்பது.