சிறகை, கல்விரல் – ஒரு வாழ்த்து

சிறகை, கல்விரல் இரண்டும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்புகள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு வாசகனாகவே இச் சொல்லை இங்கே வைக்கிறேன். நாவல் அடிப்படையில் வரலாறு, தத்துவம் இரண்டினதும் கலை நிகழ்வு என்கிறார் ஜெயமோகன். இக்காலம் நாவலுக்குரியது. அதனுடைய பண்பாட்டுப் பெறுமானம் பெரியது. இம்மாபெரும் அலை எழுந்து இன்னும் நெடுங்காலம் தமிழ் இலக்கியத்தை நிறைக்கும். கல்விரல் நாவலாகவும் சிறகை குறுநாவலாகவும் அதன் உள் விரிவையும் வடிவ நிறைவையும் கொண்டவை. கதையில் இருந்து நாவலுக்கான பயணத்தை தாமே தெரிவு செய்து கொண்ட களத்தினாலும் மொழியினாலும் நிகழ்த்தியிருப்பவை. இவ்விரண்டு படைப்புகளையும் தமிழ் வாசிப்புச் சூழல் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது அதன் உளவிரிவைப் பொறுத்தது. நவீன இலக்கியத்தில் வாசிப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக அந்தரங்கமானது. நாம் ஒவ்வொருவரும் ஒரு நாவலில் எங்களுடைய நாவலைத்தான் வாசிக்கிறோம். மேம்பட்ட வாசகர் அங்கிருந்தே தன்னுடைய வாசிப்பை முழுமை செய்கிறார். இவ்விரு படைப்புகள் மீதும் அது நிகழட்டும்

யதார்த்தன்

முழுமையான கட்டுரைக்கான இணைப்பு : இரு சஹிருதயர்கள்

சிறகை : வெண்மத்தகக் குவியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *