ரமேஷ் பிரேதன் : அஞ்சலி

கவிஞரும் எழுத்தாளருமான ரமேஷ் பிரேதன் இன்று காலமாகி இருக்கிறார். அவரது கவிதைகளும் எழுத்துகளும் என் இள வயதில் மிகுந்த தீவிரத்தை அளித்தவை. தனி இரக்கத்தின் பேரழுகையென மண் வந்த கலைஞன் என எனக்குள் அவரைப் பற்றிய உருவம் படிந்திருக்கிறது. அஞ்சலிகள் ரமேஷ் பிரேதன். அந்தர நதி பேரழுகையின் உப்பு நதியில் வழித்தவறிச் சேர்ந்த பாய்மரத்தில் நான் இந்தப் பாய்மரம் பலநூற்றாண்டுகளாகக் கரை தொட்டதில்லை என்னைக் கடந்து செல்லும் பறவையே உனது …

வாசலிலே கிருசாந்தி

அண்மையில் செம்மணிக்கு அருகில் யாழ்ப்பாணத்து வரவேற்பு வளைவில் இடம்பெற்ற ‘வாசலிலே கிருசாந்தி’ எனும் செம்மணி தொடர்பான கவிதைகளின் புத்தக வெளியீட்டிலும் கிருசாந்தியின் நினைவு கூரலிலும் பங்குபற்றியிருந்தேன். எழுநா வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதை நூலிலிருந்து நிலாந்தனின் ‘அமைதி நகரின் மனம்பெரிகள்’ கவிதையை அங்கு வாசித்தேன். கவிதை வாசிப்பின் சிறு முற்பகுதி விடுபட்டிருக்கிறது. எஞ்சியதை பதிவிட்டிருக்கிறேன். செழியனின் கவிதை வரியைப் போல, “எஞ்சியிருப்பவை கரித் துண்டுகளே ஆயினும் எழுதியே முடிப்போம்”. ஒளிப்படம் …

உதவி கோரல்

“முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வசித்து வரும் பரமேஸ்வரன் வானுசன் குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரேயொரு மகன் இவர் சிறுவயதிலிருந்தே கற்றலில் மிகுந்த ஆர்வமடையவராக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் ஆரம்பக்கல்வியை மு/பண்டாரவன்னியன் மகாவித்தியாலத்தில் கற்று சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று உயர்தர கல்வியை மு/ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில் பொறியியல் தொழினுட்ப பிரிவில் தோற்றி மாவட்ட ரீதியில் முதல் நிலையைப்பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள நிலையில், உடல் நிலையில் ஏற்பட்ட தீடீர் சுகவீனம் காரணமாக …

தும்பி: 82

“சிறந்த கதைகள் உண்மையைத் தேடும் ஒரு உந்துதலிலிருந்து உருவாகின்றன…அவை நம்மை நத்தையூர்ந்து செல்வது போல மெல்ல மெல்ல செயலில் உந்தும், பணிவாக்கும், நாம் அறியாத மனிதர்களுடன் மனதளவில் கனிவிரக்கம் கொள்ளச் செய்யும். அந்த மனிதர்களைப் பற்றிக் கற்பனை செய்ய உதவும். அவர்களை கற்பனை செய்யும் போது அவர்களும் நம்மைப்போன்றவர்கள் என்ற பரிவுணர்வு மனதில் நிலைத்திடும்.” தும்பி சிறார் இதழின் 82வது இதழ் அச்சாகி அந்தியூர் மலை அடிவார பழங்குடி கிராமமான …

துதிக்கை ஒற்றல் – கொடிறோஸ்

கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்த்தனின் “மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் “நோவிலும் வாழ்வு’ கவிதைத் தொகுப்பை அடுத்து கிரிசாந்தின் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளுக்கும் ஈழச்சூழலில் குறைவான வாசிப்பே நிகழ்ந்திருக்கின்றன. இவற்றிற்கு என்றில்லை அனேகமான ஈழப் படைப்புகளின் நிலையும் அதுதான். காரணம் ஈழ வாசிப்புச் சூழல் பல முன்முடிவுகளுடன் இருக்கின்றது. அதனால் தன்னிச்சையான வாசிப்போ அல்லது இலக்கிய ரசனை சார்ந்த …

எழுநா – புத்தக மன்றம்

எழுநா இதழும் அவர்களது பதிப்பகமும் ஈழத்தை மையமாகக் கொண்ட ஆய்வுகளையும் வரலாற்று உரையாடலையும் தொடர்ச்சியான செயலூக்கத்துடனும் முறையான ஒழுங்கமைப்புடனும் நிகழ்த்தி வருகிறார்கள். அவர்களது புத்தக மன்றம் செயற்பாட்டில் இணைய விரும்புபவர்கள் கீழ்வரும் வகையில் அவர்களது பெருஞ்செயலுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கலாம். * ‘ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறார். வாசகர்கள் அதை முழுமைப்படுத்துகிறார்கள்’ எழுநா புத்தக மன்றம், வருடாந்தச் சந்தாவை அடிப்படையாகக் கொண்டது. இதில் இணைவதன் மூலம் எழுநாவின் …

முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் : JNU

இம்முறை மூன்றாவது முறையாக டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மே 18 நினைவு கூரலினைச் செய்திருக்கிறார்கள் அங்குள்ள தமிழ் மாணவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரிந்தா ஜே என் யுவில் படித்துக் கொண்டிருந்த பொழுது அங்கிருக்கும் தமிழ் மாணவர்கள் நினைவு கூரலினைச் செய்ய விரும்பியிருந்தார்கள். அங்கு அப்பொழுது படித்துக் கொண்டிருந்த தமிழ் நாட்டு மாணவர்களும் பிரிந்தாவும் சிங்கள ஆற்றுகைக் கலைஞரான பிரபுத்தாவும் இணைந்து நினைவு கூரலினை ஒழுங்கு படுத்தியிருந்தார்கள். …

மலரினைச் சாத்துமென்!

மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில் புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென் மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும் உயிர்களை இழந்தும் ஆழப்பாயும் வேர்களின் வீர்யம் மண் தான் அறியும் இரைச்சலை மேவி இசைக்கும் நாளில் எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொரு மலரினைச் சாத்துமென்! அஸ்வகோஷ் * உடல் கடலோரம் தலை பிளந்து கிடந்த உடல் இறப்பிலும் மூட மறுத்த கண்களின் நேர் கொண்ட பார்வையில் மிதக்கிறது: …

கொடிறோஸ் – விற்பனையில்

எனது முதலாவது குறுநாவலான கொடிறோஸ், ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக தற்போது மேலுள்ள கடைகளில் கிடைக்கும். பிரதியின் விலை 1000 ரூபாய். இம்முறை புத்தக வெளியீடு நிகழ்த்தும் எண்ணமில்லை. ஆகவே வாசகர்களும் நண்பர்களும் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். வாசித்த பின்னர் உங்கள் கருத்துகளை எழுதி Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

தாயதி : ஒரு பேரன்னையின் பெருங்கனவு

தாயதி பதிப்பகம் என்பது கவிஞர் தில்லையது உள்ளாற்றலின் பேருருவம். எதற்கும் அஞ்சாத தன் நெஞ்சின் குரலை மட்டுமே கேட்டிருக்கும் பேரன்னை போன்றவர் தில்லை. அவருடன் சில முறை கதைத்திருக்கிறேன். என்னுடைய ஏதாவது ஒரு தொகுப்பை நான் விரும்பும் வகையிலான தாளும் அட்டையும் போட்டுப் பதிப்பிக்கலாம் எனச் சொல்லியிருந்தார். எனது கவிதைத் தொகுப்பின் முப்பது பிரதிகளைச் சுவிசுக்குப் பத்தும் தில்லை அறிவாலயத்துக்கு இருபதுமாக வாங்கிக் கொண்டார். அது எனக்குப் பெரிய ஊக்கத்தை …