PRSFG is pleased to present ‘The Moon Under the Sea’ by Sivasubramaniam Kajendran at 138, Galle Road, Colombo 03. The vast expanse of the Indian Ocean is not just a source of…
Category: Blog
Your blog category
சிறிய புன்னகைகள்
சிறிய புன்னகைகள் வாழ்க்கைக்கு அடிப்படையானவை. ஒவ்வொரு நாளிலும் சில கணங்கள் அத்தகைய புன்னகைகளுக்கெனத் திறந்திருப்பவை. அவற்றை நோக்கும் கண்களில் புன்னகையை தீத்தி விடுபவை. தீத்திய பின் எஞ்சிய உணவுப்பருக்கையை துடைத்து விடும் விரல்களைப் போல அந்தப் புன்னகையின் அசட்டுத்தனத்தை வரவேற்கும் இசையின் இரு கவிதைகள்….
நீலி : பெப்ரவரி இதழ்
பண்பாட்டு பெண்ணிய உரையாடல்களை முன்னெடுக்கும் நீலி இதழ் வெளிவந்துள்ளது. தொடர்ச்சியாக தீவிரமாக நிகழ்த்தப்படும் எந்த உரையாடலும் நீண்ட காலநோக்கில் பாதிப்புகளை உண்டாக்கக் கூடியது. இதழ் குழுவினருக்கு வாழ்த்துகள். நீலி : பெப்ரவரி
Influencers
ஈழத்துச் சூழலில் இலக்கியம் மற்றும் செயற்களங்களில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று எனது சிந்தனைகளின் வழி என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் பாதிப்பை நிகழ்த்துகிறேன் என்பது. அச்சுற்றியுள்ளவர்கள் என்னைப் போலப் பேசுகிறார்கள் என்பது. உண்மையில் பாதிப்பைச் செலுத்துமளவு சில அடிப்படை விடயங்கள் சார்ந்த அறிவுழைப்பும் செயற்கள…
அமைப்பு, செயல், நெறிகள்
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மூன்று அமைப்புகளில் செயற்பட்டவன் என்ற அடிப்படையில் ஜெயமோகனின் அமைப்பு பற்றிய விளக்கங்கள் பொருள் பொதிந்தவை என அனுபவ அடிப்படையில் சொல்ல முடியும். மேலதிகமாகச் சில விடயங்களைக் குறிப்பதென்றால் ஒன்று, அமைப்புகளை அல்லது இலக்கியக் குழுக்களை அரசியல்மயப்படுத்துகிறேன் எனும் பேர்வழியில் நுழைந்து…
கூட்டத்துடன் தனித்திருத்தல்
ஜெயமோகனின் இந்த உரை இன்றைய கால மனிதருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய இயல்புகள் பற்றிய கூர்மையான அவதானிப்புகளைக் கொண்டது. ஒரு எழுத்தாளராக கூட்டத்தையும் தனித்திருத்தலையும் பயின்று வருவது என்னளவில் மிக அடிப்படையான வாழ்முறையாக மாறி வருகிறது. இந்த உரையின் சிந்தனைகளை ஒருவர் தன் சிந்தனையுடன்…
ஒஷோ : ஓர் உரை
ஓஷோவை அறிவதில் உள்ள சிக்கல் அவரை ஒரு ஊழ்க சாமியாராக எண்ணுவதில் உள்ளது. ஒஷோ அவரே தன்னைச் சொல்லிக் கொண்டது போல ஒரு அழைப்பு. அவரது சிந்தனைகள் ஒரு கூர்மையான தொல் ஆயுதங்கள் போன்றவை. அவற்றைக் கொண்டு நாம் சிந்தனையில் உண்டாக்கிக் கொண்டிருக்கக் கூடிய…
பேய்க் கதை
ஒரு கதைக்கென உண்டாகும் வரலாற்றுப் பின்னணி அக்கதையின் வடிவத்தையும் வெளிப்பாட்டு நுட்பங்களையும் மாற்றிக் கொள்வதை ஜெயமோகன் சுவாரசியமாக விளக்கும் காணொலி இது. பேய்க் கதை கதைக்காமல் போ என்ற ஈழத்து வட்டார வழக்கில் உள்ள பகுத்தறிவுடன் அன்றி இலக்கியம் என்னும் கனவுடன் அணுகும் வாய்ப்பை…
எங்கோ ஒரு கிளி
வியாசர் பற்றிய ஜெயமோகனின் இந்த உரை பண்பாட்டில் நீடிக்கும் காவியத்தின் தன்மை பற்றிய அக மற்றும் புறச்சித்திரத்தை கொடுப்பது. ஒரு கதையும் கதையாசிரியரும் தொன்மமாகி மிளிரும் காலத்திலிருந்து அதைச் சிந்திப்பது.
கவிதைகள். In
கவிதைகளுக்கான இணைய மாத இதழாக வெளிவரும் கவிதைகள்.in இன் ஜனவரிக்கான இதழ் வெளிவந்திருக்கிறது. மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின் ஆகியோர் இவ்விதழின் ஆசிரியர்கள்.