Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Category: ஆக்கங்கள்

சிறகை : ஆவேசமான ஒரு பறத்தல்

Posted on February 1, 2026

ஈழத்து இலக்கியத்தில் புனைவுகள் மீதிருக்கும் அடிப்படையான சிக்கல்கள் மூன்று. முதலாவதான சிக்கல், புனைவுக்கான மொழியின்மை. இதைச் சுட்டிக் காட்டும் பொழுது பலரிடமும் குழப்பமான முகபாவனைகளையே எதிர்கொண்டிருக்கிறேன். என் சின்ன வயது முதல் ஈழத்துப் புனைவுகளைக் கண்டு ஓட்டமும் நடையுமாய் தப்பி ஓடிய நினைவுகள் வருகின்றன….

‘கனவே திறந்து விடு, உன் கதவை’  

Posted on June 3, 2025

(கருணாகரன்) ‘இந்த உலகம் நம் முன் கற்களால் எழும்புகிறது’ கிரிசாந் எழுதிய ‘பால்யம்’ என்ற கவிதையில் இந்த வரிகளைப் படித்தபோது ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். ஏறக்குறைய இதையொத்ததாகவே சிவரமணியும் எழுதினார். ‘…இரவு; இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்; நாளைக் காலையில் சூரியன் உதிக்குமா என்பதில்…

விவாதத்தின் அடிப்படைகள்

Posted on April 16, 2025

“எனவே, மானுடர் எவ்வகையிலும் எங்கும் வெளிப்படுத்தியிருக்கும் அனைத்துத் துயர்களும் பொய்யே. அன்பைநாடி, அடைக்கலம்கோரி, சினத்தைமூட்ட, பொறாமையைக் கிளப்ப, வஞ்சம் தீர்க்க, பிழையை மறைக்க, பழியை மறக்க, பொறுப்பை துறக்க என அனைத்துக்கும் மானுடர் கைக்கொள்வது துயரையே. எனவே இவ்வுலகில் பெரிதும் புனையப்பட்டது துயர்தான். புனையப்பட்ட…

களியின் ஆன்மீகம்

Posted on December 15, 2024

ஒரு வானமும் ஒரு மரமும் மிச்சமிருக்கும் வரை மானுடத்தின் மீது நம்பிக்கை குன்றாதிருக்க வேண்டுமென ஒலிக்கும் கவிஞனின் குரலே ஆதி பார்த்திபன். ஈழத்துக் கவிதைகளில் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் அதன் நுண்மைகள் பற்றிய வரிகளும் கீற்றுகளிடையே நிலவெனத் தோன்றிக் கொண்டேயிருப்பவை. வாழ்வை போரின் ஓவியத்துணியில்…

கலங்கரை விளக்கின் ஒளிச்சுழல்

Posted on December 12, 2024

ஈழத்துக் கவிதைகளின் வருங்கால அடைவுகளிற்கான திசைவழியை உண்டாக்கும் புதிய குரல்களின் வருகை கடந்த இரு வருடங்களில் நிகழ்ந்து வருவதை அவதானிப்பது ஒரு கவிதை வாசகனாக என்னை நிறைவளிக்கச் செய்வது. இவ்வருடம் ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக கவிஞர் வசிகரனின் “நோவிலும் வாழ்வு” எனும் தலைப்பிலான முதற்…

பித்தும் கவிதையும் : 02

Posted on November 26, 2024

பத்தொன்பது வயதில், கவிஞரும் ஓவியரும் அரசியல் பத்தி எழுத்தாளருமான நிலாந்தன் அவர்களிடம் பேச்சு மூல ஆங்கிலம் கற்கச் சென்றேன். அவருடன் அரசியல் பற்றியும் இலக்கியம் பற்றியும் நிறைய உரையாடியிருக்கிறேன். கவிதைகளை வாசித்து அபிப்பிராயங்கள் சொல்லுவார். ஓர் ஆளுமையாகவும் ஆசிரியராகவும் என்னை அவர் ஈர்த்தார். றமணன்…

பித்தும் கவிதையும் : 01

Posted on November 25, 2024

கவிதையால் மட்டுமே அடங்கக்கூடிய தாகமுடையவனாக இருப்பதே கவிதைக்கும் எனக்குமான உறவு. * வைரவர் கோயிலின் திருவிழாக் காலங்களில் குஞ்சுக்கண்ணா பாடும் தேவாரங்களைக் கேட்டு நின்றது கவிதையை அறிவதன் தொடக்க நினைவாக இருக்கிறது. எதிர் நிற்கின்ற தெய்வ உருவைக் குரலால் அழைத்துச் சொல்லால் உயிரளித்து “ஆரொடு…

உண்ட என் நலன்

Posted on May 18, 2024

காட்டின் கரையில் உள்ள விளையாட்டுக் களத்தில் யானைகள் உலவுகின்றன. மரங்களை முட்டிக் கிளைகளை இழுத்து மலர்களையும் கனிகளையும் கொய்கின்றன. மழை பெய்த சேற்று மண்ணில் அவை அழுந்திப் பதிக்கும் பாதங்களில் சேற்று நீர் நிறைகின்றது. ஒரு பெரும் மழைக்காலத்தில் காதலனுடன் கூடிக் களித்த இரவு…

நறுந்தூபத்தின் புகைக்கயிறு

Posted on May 17, 2024

பாலையின் கோடி கோடி மணற்துகள்களும் ஒரு நாளின் பிரிவின் அணுக்கள் எனச் சூழ்ந்திருக்கிறது. இறுக்க மூடிய விழிகள் வெளிச்சத்தில் திறந்து கொள்ளும் போது புள்ளிப் புள்ளியாய் தோன்றும் பொட்டுகள் மெய்யை ஒருகணம் கலங்கித் தெளிய வைக்கிறது. பாலையின் ஒளி வெப்பம். உடல் வியர்த்து உப்பு…

கார்காலமில்லை

Posted on May 15, 2024

தோழி! இது தலைவன் வருவேன் எனச் சொல்லிய கார்காலமில்லை. அதோ பார் பிடவம் மலர்கள் அவிழ்ந்திருக்கின்றன. முன் கார்காலத்தின் மழையிது. மேகங்கள் இனி வரப்போகின்ற மழைக்காலத்திற்காகத் தங்கள் சட்டைகளைப் பிழிந்து உதறிப் போட்டபடி ஆகாயக் கொடியில் அலைப்புறுகின்றன. வானத்தின் முழங்கும் குரல் கேட்கின்றது. உன்…

Posts pagination

1 2 … 13 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,170)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,006)
  • காதலின் முன் பருவம் (1,997)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,908)
  • விடுதலையில் கவிதை (1,890)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme