மல்லிகைக் கொடியில் ஒரு பாகற்காய்

யுத்தம் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருந்த 90 களின் பிற்பகுதியில் எழுந்து வந்த இளைய தலைமுறையில் எஸ்போஸ் என அழைக்கப்படும் சந்திரபோஸ் சுதாகர் மொழியின் அடுக்குகளில் இன்னொரு திசையைத் திறந்தார். அவரது சொற்தேர்வுகள் புதிதான சொல்லிணைவுகளை இசைத்தன்மையை உண்டாக்கின. அவருக்கு அறமோ காதலோ, சீற்றமே மொழி. அவரது சொல்முறையினால் ஈர்க்கப்பட்டு உருவாகிய இளம் தலைமுறையினரில் சித்தாந்தனும் தானா விஷ்ணுவும் முக்கியமானவர்கள். அவர்களின் சொற் தேர்வுகளிலும் இணைவுகளிலும் எஸ் போஸ் இன்னமும் புன்னகைத்தபடி …

வெற்றிடத்தால் எழும் வீடு

ஈழத்தின் ஆன்மீகத் தொடர்ச்சி சித்தர்களின் சொற்களின் கவிதையாக இன்றும் திகழ்கிறது. யோகர் சுவாமி அமர்ந்திருந்த மரம் இன்னமும் நல்லூர்த் தேர்முட்டியடியில் இருக்கிறது. இளவயதில் நண்பர்களுடன் அவ்விடம் சென்று அமர்வதுண்டு. எல்லாம் எப்பொழுதோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்பும் இல்லை, எல்லாம் செப்படி வித்தை இவை இந்த நிலத்தின் சித்துச் சொற்கள். அவற்றின் கவித்துவமான அடைவு வாழ்வை வேறொன்றின் தொடர்ச்சியெனத் தன்னை உருவகித்துக் கொள்வது. எனக்கு எந்த மதத்தின் மீதும் கடவுளின் …

நுதம்பும் சேறிடை மனக்கேணியில்

1980களின் பின்னர் உருவாகி வந்த பெண்ணிய அலை தமிழ் மொழியின் ஆணதிக்க அடுக்குகளை மெல்ல மெல்லக் கரைத்தபடியிருக்கிறது. அரசியல் நுண்ணுணர்வு மிக்க மொழியைப் பெண்கள் உருவாக்கியபடியே வருகிறார்கள். 1990 களின் காலகட்டத்தில் ஒளவை, சிவரமணி, ஊர்வசி, செல்வி, ஆழியாள் போன்றோர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துள் பெண்களின் பாத்திரம் உருக்குலைந்து போக, அதிலிருந்து மாற்றான நோக்குகளைக் கொண்ட உளவமைப்புகளையும் பிரச்சினைகளையும் எழுத்தில் முன் கொணர்ந்தனர். அவை பெரும்போக்கில் எழுந்த தேசிய …

காதலின் முன் பருவம்

யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் அதன் சாம்பலிலும் தணலிலும் இருந்து எழுந்த முதல் தலைமுறைக் கவிஞர்கள் எதிர்கொண்டது இரண்டு வகையான அடிப்படைகளிலான வாழ்வை, ஒன்று, அவர்களது இளமைக் காலம் யுத்தத்தின் ஏதோவொரு பகுதி நினைவைக் கொண்டது. அதே நேரம் அது நடந்து கொண்டிருந்த போது அவர்கள் இளையவர்கள். போர் உக்கிரமாக நிகழ்ந்த நிலத்திற்கு வெளியில் வேறொரு வாழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. உள்ளிருந்தவர்கள் அதன் மிகுதிகளையும் இறுதியையும் ஞாபகக் கிண்ணங்களில் ஏந்தினர். மற்றையவர்கள் …

மாயா மற்றும் மக்தலேனா சில சிலுவையில் அறையப்பட்டவர்களின் கதைகள்

(குறிப்பு: ஆதி பார்த்திபன், யுத்தத்திற்குப் பின் உருவான புதிய தலைமுறைக் கவிஞர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். அவரது பெரும்பாலான புனைவுகள் மற்றும் கவிதைகள் அன்பின் தீராத அலைவை, முன் பருவக் காதலின் குழப்பங்களையும் மனநிலைகளையும் எழுதிச்செல்பவை. இது இவரது ஆரம்பகால எழுத்துகளில் ஒன்று) கடிதம் ஒன்று அன்புள்ள ஜீஸஸ்இன்று உங்களைச் சிலுவையில் அறைந்து முதல் நாள், என்னால் அழாமல் இருக்கமுடியவில்லை இருந்தும், நீங்கள் புனிதமானவர் நானோ உங்களுக்குச் சற்றும் பொருத்தமில்லாதவள் என்பதால் …

முத்துச் சரளைகளின் அறியாத கரையில்

தமிழின் நெடுங்கவிதை வரலாற்றில் ஆதி வாழ்வையும் காமத்தையும் எழுதிய பெண்களில் பெரும்பாலும் எஞ்சியிருப்பது பக்தியெனும் தன்னிலை. காரைக்காலம்மையார், ஒளவையார், ஆண்டாள் என்று தொடங்கும் கவிஞர்களின் சொல்லாழத்தை நவீன காலகட்ட அறிதல்கள் தன்னிலைகளை மாற்றியமைத்தன. பக்தியை உருமாற்றின. தானும் ஒரு நிகர் உயிரியெனும் ஆற்றல் எழுந்து வந்தது. “கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற்குழி வயிற்றுப் பங்கி சிவந்திரு பற்க ணீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்” என்று காரைக்கால் அம்மையார் …

யசு, நீ மட்டும்

மூடப்பட்டிருக்கும் புத்தரின் இமைகளுக்குள் நித்தியமாய் உறையும் யசோதரையின் மாசற்ற துயரம் என்பது ஆணுலகு உண்டாக்கியிருக்கும் ஞானம் என்ற கருத்துருவாக்கத்தின் மீதான தத்துவ விசாரணை. இத்தனை நூற்றாண்டுகளாய் நாம் அறியும் ஞானம் என்பது பெண் வெறுப்பின் அல்லது விலகலின் பின்னே சாத்தியப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன பெரும்பாலான கதைகள். மனித வாழ்வின் இணைவுக்கு அல்லது அதன் மேன்மைக்கானதாக இருக்க வேண்டிய கருவிகளே எதுவாயிருந்தாலும். ஞானம் என்பது தனித்திருக்கும் பொறுப்பின்மையின் விளைவல்ல. அது இவ் வாழ்வின் …

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 03

ஆயுத வழி விடுதலைப்போரில் ஆர்வங் கொண்டெழுந்தோர் பெருமளவு இளைஞர்களே. ஆயுத வழியின் தொடக்க காலத்திலிருந்தே பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்திக்கொண்டு பலர் விடுதலை இயக்கங்களில் இணைந்தனர். மிக இளம் வயதில் அவர்கள் கேட்டவற்றையும் அறிந்தவற்றையும் கொண்டு சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகளை வெல்ல யுத்தமே வழியென்று நம்பினர். பேச்சு வார்த்தைகளில், கால இழுத்தடிப்புகளில் எல்லாம் அவர்களுக்கு விசனமிருந்தது. ஓர் அவசரம், துடிப்பு, வேகம். 1985 இல் வெளிவந்த மரணத்துள் வாழ்வோம் என்ற …

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 02

90 களில் வெளியான நட்சத்திரன் செவ்விந்தியனின் ‘வசந்தம் 91’, பா. அகிலனின் ‘பதுங்குகுழி நாட்கள்’, அஸ்வகோஷின் ‘வனத்தின் அழைப்பு’ ஆகிய கவிதைத் தொகுப்புகள், ஈழத்தமிழ் கவிதை மொழியில் முக்கியமான கவித்துவ அடைவுகளைக் கொண்டவை. வனத்தின் அழைப்புத் தொகுதியில் போருக்குச் செல்பவர்கள் பற்றிய மதிப்பும் போர் உண்டாக்கியிருக்கும் அவநம்பிக்கையும் ஒருங்கே திரள்கின்றது. கவிதைகளில் தொல்கதைகளின் மீளுருவாக்கம், நெடுங் கவிதைகளில் கதைத்தன்மை கொண்ட தத்துவார்த்த விசாரணைகள் ஆழங் கொண்டன. போராளிகளின் நினைவுகள் உக்கிரமானவை. …

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 01

‘முதலில் உங்கள் சகோதரனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்’—மத்தேயு 5:24 பைபிளில் உள்ள கதையொன்றின்படி ஆதாமினதும் ஏவாளினதும் மூத்த மகன் காயீன், இளைய மகன் ஆபேல். இருவரும் தங்கள் விளைச்சல்களிலிருந்து காணிக்கையை கடவுளுக்குச் சமர்ப்பிக்க வருகிறார்கள். கடவுள் ஆபேலின் காணிக்கையில் மகிழ்கிறார். இதனால் கோபமுற்ற காயீன் தனது சொந்தச் சகோதரனாகிய ஆபேலைக் கொல்கிறான். அதன் பின், கடவுள் காயீனிடம் உன் தம்பி எங்கே என்று கேட்கிறார். காயீன், …