அண்மையில் வெளியாகிய என் புதிய நாவலான ‘தத்வமசி’, யதார்த்தனின் ‘தோறை’, தர்மு பிரசாத்தின் ‘வண்ணச்சீறடி’ ஆகிய நாவல்கள் பிரான்சிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு தபால் மூலமும் கிடைக்கும். தர்மு பிரசாத்தின் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டு நூல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தேர்முட்டித் தேங்காய் உடைக்கக் கூடுவது போல அல்லோலகல்லோலப் படாமல், லாச்சப்பலின் சட்ட ஒழுங்கைக் குலைத்து கண்ணாடிகளை உடைத்துக் கலகத்தில் ஈடுபடாமல், குறிப்பாக ஈழத்தமிழர் மானத்தை மீண்டும் சிலோனுக்கே கப்பலேற்றாமல் வரிசையாக நின்று புத்தகங்களை வாங்கிக் கொள்ளுங்கள். வரவழைக்கப்பட்ட ஆயிரம் பிரதிகளும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தாலும் நாளையே சோழ தேசத்திலிருந்து இன்னொரு கப்பல் சுவடிகள் சகிதம் வந்து சேரும் என்பதால், இரவிரவாக புத்தகக் கடை வாசலில் கடும் குளிரில் என் வாசகர்கள் படுத்திருப்பதை காண என்னால் சகிக்க முடியாது. தயவு செய்து தொ. பேசியில் தர்மு பிரசாத்திடம் பேசி குழப்பமின்றி பெற்றுக் கொள்ளுங்கள். ஆள், கடும் தூய அழகியல் நோக்குக் கொண்ட விமர்சகர் தான் என்றாலும், கதைக்கப் பேசக் கரும்பு தான்.
தொ. பே. இல : +33 65 233 75 84 (தர்மு பிரசாத்)


