பிரடி அடி – தர்மு பிரசாத்

விஷக்கன்னி நாவலில் ஒரு சுவாரசியமான கதாபாத்திரம் வரும். கையிலும் தலையிலும் பொதிகளோடும் குழந்தைகளோடும் புது நிலத்திற்குச் செல்லும் மனிதக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தன் அவர்கள் எங்கு செல்கிறார்கள் எனக் கேட்பான். அவர்கள் புது நிலம் என்றதும் கையிலிருந்த பீடியைப் போட்டு விட்டு துண்டை உதறிக் கொண்டு தானும் அவர்களுடன் புறப்பட்டு விடுவான். அசாதாரணமான முடிவுகளை எடுப்பது அந்தக் கணத்தில் என்று வாழ்பவன். புதிய சிந்தனைகள் நம்மை பாதிப்பதற்கு அவனைப் போல துண்டை உதறிக் கொண்டு புறப்படுவது தான் ஒரே வழி. கடந்த காலத்தை பீடியை உதறுவதைப் போல போட்டு விட்டு.

ரியாஸ் குரானாவின் இலக்கியம் பற்றிய பார்வைகள் இளமையில் என்னைச் சில நாட்கள் கவர்ந்திருந்தன. ஆனால் உடனே காலாவதியாகி விட்டன. அவரது நவீன கவிதை காலாவதியாகிவிட்டது எனும் பார்வை 2014 களில் முக்கியமானதாகத் தெரிந்தது. மட்டக்களப்பில் நடந்த சத்துருக்கொண்டான் இலக்கியச் சந்திப்பில் ரியாசை முதன்முதலில் பார்த்தேன். அவரது பார்வைகளை விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார். பீடியை உதறிவிட்டு அவருடன் புறப்பட்டேன். ஆனால் சில அடி தூரத்திலேயே அவருடைய கவிதை பற்றிய புரிதலில் இருக்கும் அடிப்படைக் கோணல் துலங்கி வந்தது. நல்ல கவிதை ருசியற்றவர்கள் ரியாசை மேலும் பின் தொடர்ந்தார்கள். அவர்களுக்குக் கிடைத்தது விஷக்கன்னி போன்ற கல்லும் மேடுமான நிலம்.

பிரடி அடி கட்டுரை பாலையில் பூப்பவை கட்டுரைக்கு ரியாஸ் குரானா ஆற்றிய எதிர்வினைக்கானது. ஆனால் அது சூழலையும் தொகுக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதிவிட்டு வாசிப்பதற்காக தர்மு பிரசாத் அனுப்பிய போது “பாஸ், கடுமையாக இருந்தால் சொல்லுங்கள். கொஞ்சம் ஐஸ் கட்டி போட்டு விடலாம்” என்றார். இந்த முற்குறிப்பை பார்த்து ஆவலான நானும் பயல் தேறி விட்டான். காடு பற்றியெரியும் போது சுள்ளிக் கட்டையை வைத்து கரகமாடும் கரடியைப் போல இருக்கும் ரியாசை பிரடியைப் பொத்தி போட்டிருப்பான் என நம்பி ஏமாந்து விட்டேன். அவருக்கு பின்னர் பதில் அனுப்பினேன், “உங்களுக்குச் சீனி நாக்கு பாஸ், துப்பினால் கூட இனிக்கிறது”.

கிரி

முழுமையான கட்டுரைக்கான இணைப்பு :

பிரடி அடி – தர்மு பிரசாத்

பாலையில் பூப்பவை – தர்மு பிரசாத்

பிரதிபலிப்புக்கு எதிரான பிரதிபலிப்பு – தர்மு பிரசாத்

பாலையில் முளைத்தல் – ஜெயமோகன்

முளைத்தலெனும் தொடர் – ஜெயமோகன்

புறங்கழுத்து அடியும் பூக்கும் பாலையும் – ரியாஸ் குரானா

பண்பாட்டுத் தற்கொலை : போருக்குப் பின்னரான ஈழத்து இலக்கியம் – ரியாஸ் குரானா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *