வரலாறும் கலையும் இயைந்த பிரதிகள் – ஷோபாசக்தி
தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடியும் இலங்கையின் இடதுசாரித் தலைவர்களில் ஒருவரும் சாதியொழிப்புப் போராட்டக் களத்தின் முன்னணியில் நின்றிருந்தவருமான எழுத்தாளர் கே. டானியல் அவர்களின் நூற்றாண்டு இது. இதையொட்டி அவரது ஆறு நாவல்களை ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகம் திருத்தமான செம்பதிப்புகளாக வெளியிட்டிருக்கிறது. ‘பஞ்சமர்’, ‘அடிமைகள்’, ‘கோவிந்தன்’, ‘தண்ணீர்’, ‘பஞ்ச கோணங்கள்’, ‘கானல்’ ஆகிய ஆறு நாவல்களதும் முதன்மைக் கதாபாத்திரங்கள் தலித்துகள். நாவல்களின் களம் தலித் மக்களின் வாழ்வியலும் வாழ்தலுக்கான போராட்டமும். இந்த …
