மகத்தான மாகளிறு
தமிழ்க்கவிஞர்களை ஒரு யானைக் கூட்டமென்று கொண்டால் மொழிக்காட்டில் அலையும் இக்கூட்டம் அதன் மூதறிவைச் சுமப்பவை. தம் உணர்கரத்தால் திசைகளையும் நறுமணங்களையும் உள்ளீர்ப்பவை. பித்தேறி வெருண்டு காட்டைப் புரட்டுபவை. அக்கூட்டத்தின் மகத்தான மாகளிறுகளிலொருவர் மனுஷ்ய புத்திரன். மொழியை மிக நீண்ட புனைவுப்பரப்பென ஆக்கி நாவல்களுக்கு நிகரான உரையாடற் பரப்பைத் தனக்குள் கொண்டது அவரது கவியுலகு. எத்தனை நூறு மகத்தான வரிகளை அவர் ஆக்கியளித்திருக்கிறார். சிலவேளைகளில் மண்டியிடுகிறார், சிலவேளைகளில் தூக்கிப் போட்டு மிதிக்கிறார், …
