எல்லாமே கவிதை அல்ல அல்லது எல்லாமே கவிதை
தேவதேவனின் கவிதைகள் பற்றி எழுதுவதற்கான முதற் சொல்லை மனதில் துழாவியபடி இந்த அதிகாலைப் பனியில் பஸ்ஸிற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். ஒரு இளம் பெண் கையில் வீணையைத் தூக்கியபடி நடந்து வந்து அருகில் நின்றார். தற்செயலாய் அவர் விரல்கள் பட்டு அந்த வீணை ஹம் என்று ஒரு கணத்தை இசைத்தது. அவர் வீணையைத் தூக்க முடியாமல் மாற்றி மாற்றிக் கைகளில் பிடித்துக் கொண்டிருந்தார். நான் அவரிடமிருந்து அந்த வீணையை பஸ் வரும் வரை …
