41: இருட் குழவிகள்
பேரொளியே நீ இருட்டின் குழவிமேதமையே நீ பித்தின் குழவிஅழிகலன்களே நீங்கள் மானுடரின் குழவிகள்அழியாத இருட்டே நீ வாழ்கஉன்னை வணங்குகிறோம்எங்களை விட்டு அகலாதிருகருமையே நீயே பேரழகுஇருள் கிரணங்களே நீங்களே எங் கரங்கள்இருளே விழியாகுக இருளே வழியாகுகஇருளே துணையாகுகஇருட்டின் மர்மங்களே எங்களைக் காக்குகஇருள் நாவுகளே எங்களின் புலனாகுகஇருள் கலைந்து விடியல் எழாதிருக்கட்டும்இருளே நம் பொழுதாய் அமைகஇருளின் குழவிகளே இங்கே எழுகஇருளின் கனவுகளே இங்கே பொலிக கானகம் இருளிலிருந்து தலை சிலுப்பி விழித்துக் கொண்ட …
