37: சோம வதம்
வெண்மையும் சாம்பலும் கருமையும் மேனியெனக் கொண்ட வானவில் வண்ணங்களும் புள்ளிகளும் நட்சத்திரங்களும் மிகுந்த ஆயிரக்கணக்கான புறாக்கள் பட்டினத்தின் புகைப்பெருக்குக்கு அஞ்சி அரண்மனை முன் முகப்பை அண்டி மிதந்து செட்டைகளைப் படபடவென அடித்துக் கொண்டு மண்ணிறங்கியும் விண்ணளந்தும் சுற்றின. புகைப்பெருக்குத் தீண்டாத தூரத்திலிருந்த அரண்மனை முகப்பில் நின்றிருந்த நிலவை புறாக்களின் சிறகொலியால் மெய்ப்புக்கொண்டாள். ஏதென்றறியாத கணத்தில் விழிநீர் திரண்டு ஊற இமைகளை மூடிக்கொண்டு நின்றாள். உள்ளிருந்த சுவாசம் மெல்ல அசைந்தேற தித்திக்கும் …
