39: ஆட்டம்
நிலவையின் மஞ்சத்தறையில் லீலியா உசையை நோக்கியபடி நின்றாள். “நீலா” “நீலா” என மிழற்றினாள் உசை. பச்சையின் எழிலாலான உசையின் சிறகுகளை நோக்கியவள் கூண்டின் வாயிலைத் திறந்து உசையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டாள். அகலில் ஏந்திய சுடரென உசை அவள் கரத்தில் நிமிர்ந்து நின்றாள். நிலவை அவளை நோக்கி விட்டு மொழிபெயர்ப்பாளர் பட்டினம் சென்று விட்டார் என்ற தகவலைக் கொணர்ந்த தானகியை சதுரங்கப் பலகையை எடுத்து வரும் படி சொன்னாள். இரு …
