மீண்டும் ஒரு மாணவர் புரட்சி

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் (2012 ) ஒரு ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன் நயினாதீவுக்கு சுற்றுலாவுக்குச் சென்று விட்டு வரும் போது ஜெட்டியடியில் வைத்து வாகனத்தை திருப்பிய பொழுது கால் இடறி விழுந்து டயரில் தலை நசுங்குண்டு இறந்து போனான். இதைக் கேள்விப்பட்டவுடன் மிகவும் பரபரத்துப் போனேன். கைகால்களெல்லாம் துடிக்க சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன் ஏற்கனவே இருநூறு பேருக்கு மேல் எங்கள் பிரிவு நண்பர்களும் பழையமாணவர்களும் …

பெண் நடந்த பாதை

என்னுடைய இளம் வயது முதல் கோயில்களின் உள்ளே செல்வது மிகவும் குறைவு. அதன் அழகியல் சார்ந்த அம்சங்களை ஒருதடவையிலேயே கிரகித்துக் கொள்வது தான் வழமை. அதற்குப் பின் அங்கு செல்வதற்கோ பார்ப்பதற்கோ எதுவுமில்லை. வெகு ஆழமாக எனக்கும் கோயில்களுக்குமிடையில் இடைவெளியொன்று எப்பொழுதுமே உண்டு. ஆனால் திருவிழாக்களைப் பொறுத்த வரையில் சிறு வயது முதலே அதன் நறுமணம் வீசும் தெருக்களின் மீதும் கண்ணொளிரும் விளக்குகள் மீதும் பல்வேறு அடையாளங்களுடன் விரியும் காட்சிகள் …

பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏன் வெற்றி பெற வேண்டும்?

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது பதினைந்தாவது நாள் இருளத் தொடங்கி விட்டது. அடிப்படையில் ஐந்து நாட்களுக்கு மேல் கடந்த ஏழு வருடங்களில் எந்தவொரு ஜனநாயகவழிப் போராட்டங்களும் நீடித்ததில்லை. இந்தப் போராட்டம் அதனை மாற்றி எழுதியிருக்கிறது. இன்றோடு பதினைந்தாவது நாள். தொடரும் உறுதி மட்டும் தான் அந்த மக்களை நோக்கி பலரையும் ஈர்க்கும் வசீகரம். மேலும் அவர்களின் குரலில் உள்ள ஒற்றுமையும் சுரத்தும். முதல் நாள் இருந்ததிலிருந்து இம்மியளவும் மாறாது இன்றும் …

ஆமிக்காரனே! எயார் போஸே!

கேப்பாபுலவில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் பல வகையில் முக்கியமானது. ஈழத் தமிழர் வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் தொடர்ந்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலமிது. இவற்றை சரியான வழியில் நகர்த்திச் செல்ல வேண்டியதும் ஆதரவளிக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். கேப்பாபுலவு மக்கள் இந்த போராட்டத்தின் போது காட்டும் உறுதி மெய்ச்சத் தக்கது. அங்கு குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்று வீதியில் படுத்து பனியில் நனைத்து …

ஜல்லிக்கட்டு – நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது பொலிஸ் மாணவர்களை நெருக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் பெரும் அளவில் அரச இயந்திரத்தினால் ஒடுக்கப் பட்டு வருகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் பல நாடுகளிலும் கவனயீர்ப்புகள் இடம்பெற்றன.சமூக வலைத்தளங்களிலும் பொது இடங்களிலும் இது பற்றி கார சாரமான பல விவாதங்கள் இடம்பெற்றன. ஆனால் இந்தப் போராட்டத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள …

இன்னும் எவரெவர் கால்களில் விழ வேண்டுமோ?

முன்னெப்போதுமில்லாத அளவு சமூக வலைத்தளவாசிகளும் மக்களும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு முன்வர ஆரம்பித்திருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாவது நாள் மதியத்திலிருந்து அது முடியும் இறுதித் தருணம் வரை அந்த போராட்டப் பந்தலையே சுற்றிக் கொண்டிருந்தேன். இரவில் அந்த உண்ணாவிரதிகளுடன் உரையாடுவதும், பகலில் வரும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்களின் எண்ணவோட்டங்களையும் பார்த்துக்கொண்டிருப்பதுமாக மூண்டு பகல் மூன்று இரவு அங்கு தான். மக்களின் போராடும் உரிமையை நான் மதிக்கிறேன். ஆனால் எல்லாப் …

மாற்றுக் குரல்

யாழ்பாணத்தைச் சேர்ந்த மாற்றுப்பாலினத்தவர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்ட உரையாடல்களை கடந்த காலத்தில் இரண்டு முறை விதை குழுமம் ஊடாக நிகழ்த்தியிருந்தோம், முதலாவதாக அவர்களின் பிரச்சினைகளை அவர்களே உரையாடுவது நிகழ்ந்தது. அதில் பல விவாதங்களை நிகழ்த்தி சில முடிவுகளுக்கு வந்திருந்தோம். ஒரு பொது தளத்தை இதன் பொருட்டு உருவாக்குவதென்பது அவற்றுள் முக்கியமான ஒரு முடிவு. பிறகு சில மாதங்களின் பின் மறுபடியும் கூடி அதற்கான அமைப்பு கட்டமைப்பை உருவாக்குவது …

புற்று நோய் மருத்துவம்

யாழ்ப்பாணம் மார்க்கெட்டில் வைத்து ஒரு வியாபாரி சொன்னார், “தம்பி, மைத்திரி வந்ததுக்குப் பிறகுதான் சுதந்திரமா கதைக்கேலுமா இருக்கு. இயக்கப்பாட்டு எல்லாம் போட முடியுது.” பக்கத்திலிருந்தவர் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அத வச்சு சாப்பிட முடியுமே” என்று. எல்லா இடங்களிலும் இப்படியான வார்த்தைகள் வந்து விழுவதைப் பார்க்க முடிகிறது. சாதாரண மக்கள் பெருமளவில் பொருளாதார நிலைமைகளினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அன்றாடக் கூலிகள், சிறு வணிகர்கள், நடுத்தர வர்க்க குடும்பங்கள் என்று எல்லாத் தரப்பும் …

சமகால இலங்கை முஸ்லிம் சமூகத்தை வாசித்தல் – ‘உம்மத்’ நாவலை முன்வைத்து

அறிமுகம் அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாவல் ‘உம்மத்’. கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஸர்மிளா செயித்தால் எழுதப்பட்டிருக்கிறது. அதன் சமகாலத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இந்தப் பத்தி முஸ்லிம் சமூகத்தினதும், குறிப்பாக அதன் பெண்களின் நிலைமையைப் பற்றியும் அறிய இந்த நூலை (புத்தகத்தில் குறிப்பிட்டதன் படியே இதை நாவல் என அறிமுகம் செய்கிறது பத்தி) பயன்படுத்துகிறது. இன ரீதியாக மூன்றாவது நிலையில் இருக்கும் இலங்கை முஸ்லிம் இனம், அதன் உள்ளடுக்குகளில் எதைச் …