அனார் : சில குறிப்புகள்

உணர்வுக்குள்ளே மலையும் வனமும் பிரபஞ்சவெளியும் உண்டு! அனார், அச்சிறு கண்களின் வழி என்னுலகத்தை நிரப்பி அள்ளிக்கொடுக்கும் தாய்மையின் கருணை. தன்னைக் கண்டடைதலின் பிரகாரம் வாழ்வில் ருசிகொண்டவோர் மந்திரப்பேழை. கவிதையின் மொழிகளுக்குள் தழைத்து வாழ்வென்றாகியிருக்கும் இவ் உயிரைத் தூக்கிச்சுமக்கும் துணிவையும், தைரியத்தையும் தன் எழுத்துக்களின் வழி சேர்ப்பித்த என் மூத்தவருக்கு வாழ்த்துக்களும், நன்றியும், அன்பு முத்தங்களும். எத்தனையாயிரம் பாடுகளைக் கொண்டலையும் வாழ்விது. அனாரின் கண்கள் வழி நானடையும் கனவென்பது மொழியில் திளைத்து …

தமிழ் நிலத்துப் பாடினி

அனார் தமிழ்க்கவிதைகளுக்கு இஸ்லாமியப் பண்பாட்டினது செழுமையான மரபின் ஆழத்தை அளித்தவர்களில் ஒருவர். தொண்ணூறுகளின் முதன்மையான கவிஞர்களில் ஒருவரான அனார் நீண்டதும் நெடியதுமான இலக்கியப் பயணத்தில் குன்றாத கலைத்தன்மையும் செயலூக்கமும் கொண்டு துலங்கி மிளிர்பவர். அனாரின் வருகை தமிழின் நெடு வரலாற்றில் வைத்து நோக்கப்பட வேண்டியது. தொடக்கத்தில் அக்காலப் பெண் கவிஞர்களின் ஆவேசமான குரலே அனாரிடமும் வெளிப்பட்டது. சீற்றமும் ஆவேசமும் இளமையின் குணங்கள். பின்னர் ஒரு இளங்கொடி காற்றில் பற்றி சுவரில் …

குறிஞ்சியின் தலைவி

குறுந்தொகையின் காட்சிகளுக்குள் நேரே சென்று வைத்துவிடக்கூடிய அனாரின் கவிதையிது. குறுந்தொகைக் கவிதைகளுக்குச் சில பின்னணிக் காட்சிகளை எழுதி அவற்றை அதனோடு பொருத்தி வாசிக்கும் முறையையே எழுதி வருகிறேன். அதில் நவீன கவிதைகள் சங்ககாலக் கவிதைகளைச் சென்று மீளும் வரிகள் அலாதியான வாசிப்பை உருவாக்குகிறது. அது ஒரு நெடுங் கயிற்றை இங்கிருந்து இழுத்துப் பார்த்து அந்தப் பக்கம் இருப்பவரின் உணர்வை அறிந்து உள்ளூரத் தோன்றும் மகிழ்ச்சி. வேலன் வெறியாட்டு நிகழும் போதோ …

கனவுகளின் தெய்வம்

எந்த விடுதலைக்கான மொழியும் கேள்விகளிலிருந்தும் சீற்றங்களிலிருந்துமே அடிப்படையில் எழும். பின்னர் அவ்விடுதலை தன் கனவைத் தானே கண்டாக வேண்டும். ஒரு ஆன்மீக விடுதலை அடிப்படையில், இந்த வாழ்வு எதன் பொருட்டுப் பொருள் கொள்ளத் தக்கது? இதற்கு என்ன மதிப்பு? நான் என்பது என்ன? இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்? இது போன்ற சீற்றமிகு ஆதாரக் கேள்விகளிலிருந்து உருவாகுவது. சீற்றம் ஒரு தொடக்கம் மட்டுமே. பின்னர் அது தன்னில் கனிய வேண்டும். அனாரின் …

முத்துச் சரளைகளின் அறியாத கரையில்

தமிழின் நெடுங்கவிதை வரலாற்றில் ஆதி வாழ்வையும் காமத்தையும் எழுதிய பெண்களில் பெரும்பாலும் எஞ்சியிருப்பது பக்தியெனும் தன்னிலை. காரைக்காலம்மையார், ஒளவையார், ஆண்டாள் என்று தொடங்கும் கவிஞர்களின் சொல்லாழத்தை நவீன காலகட்ட அறிதல்கள் தன்னிலைகளை மாற்றியமைத்தன. பக்தியை உருமாற்றின. தானும் ஒரு நிகர் உயிரியெனும் ஆற்றல் எழுந்து வந்தது. “கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற்குழி வயிற்றுப் பங்கி சிவந்திரு பற்க ணீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்” என்று காரைக்கால் அம்மையார் …