வாற்பேத்தை வாழ்க்கை – யதார்த்தன்
“சில மாதங்களுக்கு முன்பு இதே அரசின் சுங்கத்துறை ஈழத்தின் சில இலக்கிய நூல்களைத் தடுத்து வைத்தது. அதற்காக எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் இணைந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் கண்டனப் போராட்டங்களை முன்னெடுத்தோம். இன்றைக்கு விருதிற்கு முன்னால் அண்ணாந்து இருப்பவர்கள், இதற்கு முன்னால் அவற்றை வாங்கி வீட்டில் ஷோக் கேசை அலங்கரித்தவர்கள், கண்ணாடியில் குஞ்சி மயிரைத் திருத்தி விட்டி பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு எழுத்தாளரும் கலந்து கொள்ளவில்லை. ஒரு சொல் கூடப் பேசவில்லை. …
