இனப்படுகொலைக்கெதிரான ஓர் மக்கள் இயக்கம்

முள்ளிவாய்க்கால் பேரவலமும் ஆயுத வழிப்போராட்டமும் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன. சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இதன் விளைவுகள் ஆழமான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றன. அவை சரியாக மதிப்பிடப்பட்டு அதன் மூலமான சமூக அசைவென்பது நிகழவில்லை. பல்வேறு இழுவிசைகளினாலும் நாட்டின், சர்வதேசத்தின் நிலமைகளினாலும் தமிழ் மக்கள் தம்மைத் தாம் விரும்பிய திசையில் அசைத்துச் செல்வது இன்னமும் முடியாததொன்றாகவே இருக்கிறது. சமூக பண்பாட்டு அரசியல் தளங்களில் இடம்பெற்ற மாற்றங்கள், மக்களை குவிமையமாகத் திரள்வதிலிருந்து விலத்தி …

கண்ணீரில் விளக்கெரியும் தேசம்

கண்ணகி, அறச் சீற்றத்தின் படிமம். நீதி கேட்டு அரசை எரித்த பெண்ணின் கதை தான் கண்ணகியம்மனின் கதை. அவள் முல்லைத்தீவு மக்களுக்கு நெருக்கமானதொரு தெய்வம். இறுதியுத்தத்தின் பின்னர் இழந்த புத்திரருக்காகவும் மாண்ட சோதரருக்கும் கண்ணீர் விட்டு இன்றும் நூறு நூறு நாட்களாய் தெருவிலிருக்கும் ஆயிரம் ஆயிரம் தாய்மாரின் படிமம். ஏதோவொரு காலத்தில் இந்த நிலத்தில் அந்தப் பெண்ணின் கால் நடந்துதானிருக்கும். இன்று ஒரு பெரும் விடுதலைப் போராட்டம், லட்சக் கணக்கில் …

இன்னும் எவரெவர் கால்களில் விழ வேண்டுமோ?

முன்னெப்போதுமில்லாத அளவு சமூக வலைத்தளவாசிகளும் மக்களும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு முன்வர ஆரம்பித்திருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாவது நாள் மதியத்திலிருந்து அது முடியும் இறுதித் தருணம் வரை அந்த போராட்டப் பந்தலையே சுற்றிக் கொண்டிருந்தேன். இரவில் அந்த உண்ணாவிரதிகளுடன் உரையாடுவதும், பகலில் வரும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்களின் எண்ணவோட்டங்களையும் பார்த்துக்கொண்டிருப்பதுமாக மூண்டு பகல் மூன்று இரவு அங்கு தான். மக்களின் போராடும் உரிமையை நான் மதிக்கிறேன். ஆனால் எல்லாப் …

மெரினாவின் அலை ஒதுங்கிய கரை

ஏராளமான விமர்சனங்கள் வவுனியா உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது உருவாகி வருகிறது. வழமையை விட கடந்த ஆறு வருடங்களுக்கும் மேல் இடம்பெற்று வந்த காணாமல் ஆக்கப்பட்டு வந்தோர், அரசியல் கைதிகள், பயங்கரவாதச் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இன்னும் பல அரசியல் பிரச்சினைகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தற்போது உருவாக்கியிருக்கும் அலை என்பது புதியது. வழமையாக சோக ஸ்ட்டேட்டஸ் போட்டு கண்ணீர் புரொபைல் போட்டு கடந்து விடும் ஆயிரக்கணக்கான …

ஆகாயத்தில் ஒரு வாக்கு

யுத்தம், ஆயுதங்களிற்குப் பிறகு தாய்மார்களிடம் கையளிக்கப்படுகிறது. முதற் தாய் “நான் சைக்கிள்ல போய்க்கொண்டிருந்தன், ஆகாயத்தில் ஒரு வாக்குக் கேட்டது, யேசு சொன்னார், நீ வீடு கட்டி முடிப்பாயடி எண்டு. அது பலிச்சது. அது மாதிரி மேல் லோகத்தில இதுக்கெல்லாம் ஒரு தீர்ப்பு இருக்கெண்டு நம்பிறன். எங்கட பிள்ளையள கொண்டு, கொத்தி எறிஞ்சு போட்டாங்களோ தெரியாது. மைத்திரியும் சொல்ல மாட்டான், மகிந்தவும் சொல்ல மாட்டான். அதையெல்லாம் யேசுதான் பார்த்துக்கொள்ளுவார். நான் யேசுவ …