நும்மார்பிற் பாம்பு

தமிழில் சுடுகாட்டின் நிகருலகையும் பக்தியையும் இணைத்த பெருபேய் காரைக்கால் அம்மையார். சிவன் என்ற கடவுளுருவுடன் உண்டாகும் உறவை, பக்தி நிலைப் பாவமாகக் கொள்ளும் வாசிப்பு பெருமளவு உள்ளது. ஆனால் அதன் புறவுலகைச் சாம்பலைப் போலுதிர்த்து உள்நிற்கும் மனநிலையை விரக்தியுடன் மானுட விலக்கமும் கூடிய பெண் மனதிற்கு தெய்வ நம்பிக்கையளிக்கும் அமைதியாகவும் கொள்ள இயலும். தன்னழகுடலைத் தானேயுருக்கி, எலும்பு தோலாகியதன் பின்னரே அவர் பக்தியின் வெளியில் நிலைகொள்ள அனுமதிக்கப்பட்டார். அவர் தன்னைப் …