கண்ணீரில் விளக்கெரியும் தேசம்

கண்ணகி, அறச் சீற்றத்தின் படிமம். நீதி கேட்டு அரசை எரித்த பெண்ணின் கதை தான் கண்ணகியம்மனின் கதை. அவள் முல்லைத்தீவு மக்களுக்கு நெருக்கமானதொரு தெய்வம். இறுதியுத்தத்தின் பின்னர் இழந்த புத்திரருக்காகவும் மாண்ட சோதரருக்கும் கண்ணீர் விட்டு இன்றும் நூறு நூறு நாட்களாய் தெருவிலிருக்கும் ஆயிரம் ஆயிரம் தாய்மாரின் படிமம். ஏதோவொரு காலத்தில் இந்த நிலத்தில் அந்தப் பெண்ணின் கால் நடந்துதானிருக்கும். இன்று ஒரு பெரும் விடுதலைப் போராட்டம், லட்சக் கணக்கில் …

பெண் நடந்த பாதை

என்னுடைய இளம் வயது முதல் கோயில்களின் உள்ளே செல்வது மிகவும் குறைவு. அதன் அழகியல் சார்ந்த அம்சங்களை ஒருதடவையிலேயே கிரகித்துக் கொள்வது தான் வழமை. அதற்குப் பின் அங்கு செல்வதற்கோ பார்ப்பதற்கோ எதுவுமில்லை. வெகு ஆழமாக எனக்கும் கோயில்களுக்குமிடையில் இடைவெளியொன்று எப்பொழுதுமே உண்டு. ஆனால் திருவிழாக்களைப் பொறுத்த வரையில் சிறு வயது முதலே அதன் நறுமணம் வீசும் தெருக்களின் மீதும் கண்ணொளிரும் விளக்குகள் மீதும் பல்வேறு அடையாளங்களுடன் விரியும் காட்சிகள் …

எந்தச் சாமிகளின் பக்கம் நிற்கப் போகிறோம்?

யாழ்ப்பாணத்தின் சிறுதெய்வ வழிபாட்டு முறையில் நிலவி வந்த ‘பலியிடும்’ வழக்கத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பலியிடும் வழக்கம் தொடர்பாகவும், அதன் வரலாற்றுப் பின்புலங்கள் சமூக நம்பிக்கைகள் பற்றியும், மேலும் இதன் எதிர்ப்பின் பின்னாலுள்ள நியாயங்களையும் அரசியலையும் பற்றி விவாதிக்கும் பத்தியே இது . நிறுவனச் சமயம் (பெருந் தெய்வங்கள்) இயற்கைச் சக்திகளின் ஆற்றலைப் புரிந்து கொள்ள இயலாத நிலையிலும் ஆவிகளைக் குறித்த அச்ச உணர்வின் அடிப்படையிலும் …