கலங்கரை விளக்கின் ஒளிச்சுழல்
ஈழத்துக் கவிதைகளின் வருங்கால அடைவுகளிற்கான திசைவழியை உண்டாக்கும் புதிய குரல்களின் வருகை கடந்த இரு வருடங்களில் நிகழ்ந்து வருவதை அவதானிப்பது ஒரு கவிதை வாசகனாக என்னை நிறைவளிக்கச் செய்வது. இவ்வருடம் ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக கவிஞர் வசிகரனின் “நோவிலும் வாழ்வு” எனும் தலைப்பிலான முதற் தொகுதி அண்மையில் வெளியாகியிருக்கிறது. ஈழத்துக் கவிதைகளின் பிரதான செல்நெறிகளைக் கிளைத்து முறித்து அதன் வழிநடைகளை விரிவுபடுத்தும் காலமெனக் கடந்த பத்தாண்டுகளைச் சுட்டிப்பாகச் சொல்லலாம். போர் …
