நீலி : பெருந்தேவி சிறப்பிதழ்

நீலி இதழில் கவிஞரும் எழுத்தாளருமான பெருந்தேவி அவர்கள் பற்றிய சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறார்கள். பெருந்தேவி தமிழின் முக்கியமான கவிஞர் என்பது என் எண்ணம். அவர் குறித்து சிறப்பிதழ் வெளியாகுவது முக்கியமான பண்பாட்டுச் செயற்பாடு. வாழ்த்துகள் நீலி இதழுக்கு. https://neeli.co.in/category/%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-2024/

இளங்கவிகளுக்கு சில அட்வைஸ்கள்

தமிழ்கூறும் நல்லுலகிலே புதிதாக எழுதவரும் இளங்கவிகளுக்கு சீனியர் கவிஞர்கள் அட்வைஸ்களை வழங்குவது வழமையும் கடமையும். சபரிநாதன், பெருந்தேவி, போகன் சங்கர் ஆகிய மூவரினதும் சில கவிதைகள் தங்களது அனுபவங்களாகவும் அட்வைஸ்களாகவும் சுவாரசியமாக இருந்தன. சில கவிதைகள் அனுபவங்களாகவும் சிலது அட்வைஸ்களாகவும் இருந்தன. அனுபவங்களை வாசிக்கும் போது பாவமாகவும் அட்வைஸ்களைக் கேட்கும் பொழுது பயமாகவும் இருந்தது. இதையெல்லாம் வாசித்த பின் என்னத்தை எழுதி என்னத்தை வாசிச்சு என்று சுய இரக்கமாகவும், இதையெல்லாம் …

யட்சி வதியும் சரக்கொன்றை

தலம்: புவிதரு: சரக்கொன்றைபாடலருளியவர்: பெருந்தேவி எதிர்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமிடையில் ஆடும் பொன் ஊஞ்சலென மொழியில் நிகழ்ந்தவை பெருந்தேவியின் கவிதைகள். பெண் தன்னிலைகளின் உன்மத்தமும் சீற்றங்களும் கசப்புகளும் பெருந்தேவி கவிதைகளில் ஆடுகின்றன. சொற்களவ் ஊஞ்சலில் குழந்தைகளைப் போல் வந்தமர்கின்றன. மெல்லக் கால் ஊன்றிப் பிற்காலத்திற்கும் எதிர்ப்படும் காலத்திற்குள்ளும் தலையும் காலும் நுழைக்கும் கவிதைகள். அவரது கவிதைகளில் உள்ள வாழ்க்கைகள் கடந்ததும் இன்றையதும் எதிர்ப்படுவதுமென முக்கால விருட்சத்தின் கிளையில் தொங்குபவை. இந்தத் தன்மை தமிழில் …