தவளைத் தாவல்: கடிதம்
லலிதகோபன் * வணக்கம் லலிதகோபன், கவிதையின் முதற் சொற்கள் கலையாடிகளின் வாயிலிருந்து எழும் உச்சாடனங்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்புகிறேன். அதன் ஆதித்தன்மை இன்றளவும் மாறுபடவில்லை. ஒரு வடிவத்தின் எல்லைகள், பிறப்பில் மனித உடல் ஆவதைப் போல் நிலைகொள்பவை. அவற்றின் உள்ளுயிரை வேறுவேறு வகையில் கற்பனை செய்துகொள்ள முடியும் என்றாலும் வடிவம் பற்றிய எல்லைகள் அதன் பிறப்பியல்பால் மட்டுப்பாடு கொண்டவை. சொல்லில் திகழும் கலையே கவிதை. இதற்கு மாற்றான பார்வைகள் …
