மகத்தான ரத்தத்துளி

கலை இலக்கியங்களில் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய ரொமாண்டிசிசக் காலகட்டம் அதற்கு முந்தையதான அறிவொளிக் காலகட்டம், கைத்தொழிற்புரட்சி காலகட்டத்து சிந்தனைகளுக்கு எதிர்வினையாக இயற்கையின் ஒரு பகுதியாக மனிதரையும் வாழ்வையும் முன் வைத்தது. கற்பனை, தனிமனித பார்வை மற்றும் இயற்கையை வியத்தல் ஆகியன பகுத்தறிவின் தர்க்கத்திற்கு அப்பாலான வாழ்வை நோக்கும் வழியென முன்வைத்தன. கைத்தொழிற் புரட்சியின் பின்னரான காலகட்டத்தில் பிரமாண்டமான தொழிற்சாலைகளும் கட்டடங்களும் நகரங்களின் உருமாற்றமும் வேகமாக நிலக்காட்சியை மாற்றியமைக்கத் தொடங்கின. இயற்கையை …

ஒரு பஞ்சுத் துக்கம்

கவிஞர் வே நி சூர்யாவின் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கரப்பானியம் தொகுப்பின் காலத்து மொழிதலில் இருந்த அந்நியத் தொடுகையென்ற உணர்வு மெலிந்து உருகி அந்தியில் திகழ்வது தொகுப்பின் காலத்தில் பிறிதொன்றாக ஆகியிருப்பதை உணர முடிகிறது. அவரது உலகின் கவனங்கள் அமிழ்பவை அல்லது அமிழப்போகிறவை குறித்து நிகழ்கையில் கூர்மையான நூலினால் தைக்கப்படும் துணித் தையல் வேலைப்பாடுகள் போல அவரது கவியுலகு தோற்றமளிக்கிறது. சொல்லின் சுடர் ஓங்கி ஓங்கி எரிகையில் அது தொடும் …

சிருஷ்டி கீதம்

சிருஷ்டி கீதம் அப்போது இன்மை இருக்கவில்லைஇருப்பும் இருக்கவில்லைஉலகமோஅதற்கப்பாலான ஆகாசமோ இருக்கவில்லைமறைந்து நின்றது என்ன?எங்கே?எவருடைய பாதுகாப்பில்?அங்கே அடியற்ற ஆழமுடைய நீர்பரப்பிருந்ததோ? அப்போது மரணம் இருக்கவில்லைநித்தியத்துவம் இருக்கவில்லைராத்திரி பகலுக்கான அறிகுறிகளும் இல்லைஒன்றேயான அது மூச்சுவிட்டது காற்றின்றிசொந்த வலிமையினால்.அதைத்தவிர ஏதுமிருக்கவில்லை. ஆதியில் இருட்டு இருட்டால் மறைக்கப்பட்டிருந்ததுவேறுபடுத்தயியலாமையால்யாவும் நீராக இருந்ததுஅதன் உயிர்த்துவம் வெறுமையினால் போர்த்தப்பட்டிருந்ததுஅதிலிருந்து முடிவிலாத தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது. ஆதியில் அதிலிருந்து இச்சை எழுந்ததுமனதின் ஆரம்ப விதை அதுதான்இதயங்களில் தேடுகின்ற கவிஞர்கள்தங்கள் ஞானத்தினால்இன்மையில் …