யசு, நீ மட்டும்

மூடப்பட்டிருக்கும் புத்தரின் இமைகளுக்குள் நித்தியமாய் உறையும் யசோதரையின் மாசற்ற துயரம் என்பது ஆணுலகு உண்டாக்கியிருக்கும் ஞானம் என்ற கருத்துருவாக்கத்தின் மீதான தத்துவ விசாரணை. இத்தனை நூற்றாண்டுகளாய் நாம் அறியும் ஞானம் என்பது பெண் வெறுப்பின் அல்லது விலகலின் பின்னே சாத்தியப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன பெரும்பாலான கதைகள். மனித வாழ்வின் இணைவுக்கு அல்லது அதன் மேன்மைக்கானதாக இருக்க வேண்டிய கருவிகளே எதுவாயிருந்தாலும். ஞானம் என்பது தனித்திருக்கும் பொறுப்பின்மையின் விளைவல்ல. அது இவ் வாழ்வின் …

எரியும் நெருப்பும் காற்றில்: 01

‘ஓ என் தேசமேஉன் மணல் வெளிகளில்நான் நடக்கின்றேன்உன் நிர்மலமான வானத்தில்நட்சத்திரங்களைநீ என் பார்வைக்கு பரிசளித்துள்ளாய்உனது சிரிப்பினால் என்சகோதரர்கள்வாழ்கின்றனர்நீ போர்த்துள்ள சோலையினுள்ஒளித்து வைத்துள்ளவெண் முத்துக்களை என் தங்கைகள்அணிந்துள்ளனர்வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னைஅணிந்துள்ளாய் – உனக்குநான் கொடுப்பதுஉயிர் மட்டுமே’. 1985 இல் எழுதப்பட்ட சிவரமணியின் கவிதை இது. விடுதலைக்கான கனவு இளைஞர்களின் மனதில் சூல் கொண்ட காலத்தில் பெருங்கனவுகளில் வாழ்ந்த ஒரு கவிஞை சிவரமணி. வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னை அணித்துள்ளாய் என்று …