26: ஒற்று உரைத்தது

நெடுத்து வளர்ந்த தேக்க மரங்களுக்குள்ளால் அமைந்த ஒற்றையடிக் காட்டுப் பாதையில் வேறுகாடார் இடாவத்த நகரின் எல்லையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். வண்டியோட்டிகள் சொன்ன தகவல்களின் படி இடாவத்த நகரின் மையத்தில் வழமைக்கு அதிகமாக நூற்றுக்கணக்கில் சிங்கை நகர் வீரர்கள் அலைந்தபடிஇருந்திருக்கிறார்கள். புரவிகளும் இருள் வீரர்களும் நகரின் விளிம்புகளில் உள்ள குடில்களில் தென்பட்டிருக்கிறார்கள். நகரில் தேம்பவாவி நுழைந்திருப்பதாக உறுதியற்ற தகவல் ஒன்றை முதுவண்டியோட்டியொருவர் கூறினார். வேறுகாடார் பாதி நரை கூடிய …

25: சித்தர் உரைத்தது

மின்நேர் திரிசூலம் ஏந்தி ஏந்திவிடை மேல் வந்துதித்த விண் கதிரா அழல் குழலாதாளமிடும் துணங்கைகள் அணங்குகளாடிகூகைகள் பருந்துகள் ஆந்தைகளாடிகணங்களும் பூதங்களும் திசைகளுமாடிஆடலும் பாடலும் ஆடியாடிஆடிய பொற்கழல் ஏறியாடிவீசிய வார்சடை விம்மியாடிமிடற்றினில் நச்சமுது கூடியாடிகுருதியில் கூற்றன் கூத்தையாடிஆடலில் ஆடலும் ஆடியாடிஆடிய அரவுகள் மேனி சூடிஅங்கவன் ஆடல் நானுமாகிஆகினன் அவனே கால காலன்அவன் கோலமே எந்தையும் ஆன வீரன். பேய்மகள் காடவெற்பி “ஆயிரமாயிரம் கைகளினால் நுட்பமாக வாளிக்கப்பட்டு குருதியும் வியர்வையும் சிந்தி செல்வமெலாம் …

24: வேழம் உரைத்தது

குருதி வெண்கோட்டு விரிவேழமேநீயுரைஎங்கோன் ஆற்றிய செங்களம் மிதித்த உன்கோற் கால்கள் எக்கனம் பொருதின எவ்விசை ஏகினகொல்வேழ் குறும்பாநின் திசை நோக்கிய என் துதி நீண்டிலைஆயிரம் ஆயிரம் பொன்னெதிர் கதிரேமாகரம் தூக்கி நின் சூர்முகம் போற்றி வேழ்முகன் மீதினில் ஆணைபோர்வெறி மீதினில் ஆணை படுகூர் மின் உருகம் மீதினில் ஆணைவான் உம்பர் மண்ணெதிர் நின்றாலும்தூகரிமாமுகமும் மாகரிநீள்கரமும் என் சேயோன் கழற்கே. பாணன் சென்னிச்செம்மலர் விரிந்த அரசமிலை போன்ற முகத்தில் நீள் துதி …

23: வெறியாட்டன் உரைத்தது

ஆடுக ஆடுக பேய்க்களியொன்றைதேடுக தேடுக வெம்மார்பொன்றைதீயினில் கருக செந்நாவென்றைவேலினில் கூரிய கருநாவொன்றைஆடுக ஆடுக வெறியாட்டொன்றைதேடுக தேடுக குறுவாளென்றைகுருதியில் மலரச் செம்பூவொன்றைகுருதியில் மலரக் கரும்பூவொன்றை. வெறியாட்டன் சூர்விற்பன் வனக் கொற்றவையின் கற்சிலையில் நீண்டிருந்த தளிர் நாக்கை நோக்கியிருந்தான் சத்தகன். அவள் பேயுருக் கொண்டு ஆடும் தோற்றத்தில் அந்த நாவு மட்டும் சிறு கருணையின் முனையென நீண்டு தழைத்திருப்பதாகத் தோன்றியது. செஞ்சாந்துகளும் மஞ்சளும் குழைத்துப் பூசிய கருங்கல் மேனியில் கூந்தல் நெளிநாகங்களென அலைந்துறைபவை. …

22: தூமழை உரைத்தது

செருக்களமேவிய புரவியே நீயுரைமாகளன் ஏந்திய வாள்முனை கண்டனையோமின்னவன் விழிகள் உற்றனையோகூவிடும் புலிக்குரல் கேட்டனையோதேர்ச்சில் சுழல் குருதிக் கூத்தில் தாளக் கால் பூண்டனையோஇன்னிரா இராத்திரியில் சுடர் மீன்கள் விம்மினையோஅழியாட்டு வெஞ்சேற்றில் அழலெனத் திரும்பினையோ வருதோழர் உயிர் நீங்கக் கூற்றன் கயிறாகினையோ என் மாகளன் நெஞ்சம் கேட்டிட நீயுரைஆடுமஞ்சள் நோக்கியிரு விழிகள் உண்டு வேந்தேஉயிர்ப்பிலம் பற்றி நீ சென்ற வழி காற்றாடும் குடசத்தில் உற்று என. பாடினி தூமழைப் பூம்பொழில் தன்னைத் தானே …

21: சங்கு உரைத்தது

ஆங்கிவன் அளித்த அடு தமிழ்ச் சங்கே ஓங்கி நீயுரைஆழி வயிறு புக்குவேன் செருச்சேறு பூசுவேன்தூமிகு வெண்சங்கே நீயுரைஏதற்ற பெம்மான் எந்தை குலப் புலிஏற்றிய நுண்சங்கே நீயுரைகூடிய விறலியர் பாணரும் பொருநரும் கூறிய கூர்வாள் தடங்கை சேர்த்தவன்காணிய கனவைக் கண்டதும் உற்றவன்கேளிர் என நின்று களஞ் சேர் விண்சங்கே. பாணன் ஏழிசைக் கூத்தன் புலரியின் முதற் புள் பாடத்தொடங்கிய வேளை வனத்தின் எல்லையில் கூடியிருந்த புலிப்படை வீரர்கள் கரிகொண்டு பல்துலக்கி ஆற்றில் …

20: முத்து எழல்

கைகளை உயர்த்தி ஆடவரை நோக்கி வழியை விலத்திச் செல்லுங்கள் எனக் கத்தியபடி வெள்ளி முகபாடம் அணிந்த யானையிலிருந்து முத்தினியும் செழியையும் தாமரைக் காம்புகளைக் கூடையிலிருந்து அள்ளியெறிந்து பூசலிட்டனர். காவலுச் சென்று கொண்டிருந்த அலவனின் மீது வெண்தாமரையொன்றை வீசினாள் முத்தினி. அதைக் கைகளில் பிடித்துக் கொண்டவன் திரும்பவும் முத்தினிக்கு எறிய அது யானையின் முகபாடத்தில் பட்டு விழுந்தது. “அலவா, இப்படி எறிந்தால் எதிரிகள் மார்புக்கு அம்பைக் குறி வைத்தாயென்றால் அது எங்கே …

19: லீலி எழல்

விழிகளில் நீர்பெருக்கு அணைந்த போது லீலியா இளம் மஞ்சென ஆனாள். கடற்கரையில் அலைந்தும் பெட்டிகளின் மேல் தாவியும் கலகலத்தும் கொண்டிருந்த குடிகள் அவளுடைய நெடிய உருவைக் கண்டு விழி மலைத்து நோக்கினார்கள். செலினி ஒரு வாத்தைப் போல கரங்களை ஆட்டி மணலில் கால்களை விசிறிக் கொண்டு லீலியாவின் அருகில் வந்தாள். புருவங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த மயிற் பீலி வர்ணக் குற்றுகளாலான கண்களை நோக்கினாள். “லீலி, என்னவாயிற்று உனக்கு புலக்காட்சி ஏதேனும் …

18: உசை எழல்

முதற் சொல்லை உசை கேட்ட போது அது ‘நீலா’ என்றொலித்தது. தன் பசுஞ் சிறகுகளைக் கொத்தி அப்பெயர் தனக்குள் எங்கேயிருக்கிறதென்று தேடிச் சலிப்பவள் உசை. ஒவ்வொரு பீலியாய்க் கொவ்வைச் சொண்டால் கீறி இது தான் நீலாவா என பார்ப்பவள். ஆலம் விழுதுகளைக் கயிறாகக் கட்டியிழைத்த மரக்கூண்டில் தன் தாய்க்கிளி நூற்ற கூட்டின் தும்புக் குவியலில் அயர்ந்து படுத்திருந்து அப்பெயரைக் கனவில் கேட்பவள். நீலழகனின் குடிலில் எந்நேரமும் அகலெரியும். அங்கு வரும் …

17: அரூபம் எழல்

மதுச்சாலையின் அன்ன வடிவக் கொத்து விளக்குகள் ஒளிக்குமிழிகளைப் போல் ஓவியங்கள் தீற்றப்பட்ட சுவர்களிலும் தரையிலும் குமிந்திருந்தன. விளக்குகள் இல்லாத இடங்களில் கருமை கலைந்த கூந்தலெனப் படிந்திருந்தது. முது பாணர்களும் விறலியரும் பாகர்களும் படை வீரர்களும் முன்னாள் வீரர்களும் குடிகளில் சிலருமென கலவையான மனிதர்கள் மரக்குற்றிகளில் அமர்ந்து கொண்டு கரும் பாறையாலான தட்டுகளிலும் சாணத்தால் மெழுகப்பட்ட திண்ணைகளிலும் செம்மண் தரையிலும் தலைகளையும் உடல்களையும் போட்டபடி உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் குறட்டை ஒலிகள் …