42: இருட் குழவிகள் : 02
“மானுடர் தம் சொந்த நிழல்களைச் சந்தேகிப்பவர்கள் கூத்தரே. இளமையில் நாம் எண்ணும் கனவுகள் மெய்போலத் தோன்றுபவை. அணுகும் தோறும் காதல் கொண்ட பெண் காதலைப் பூரணம் என எண்ணுவதைப் போல் தோற்றமளிப்பவை. அவை நீடிக்கும் காலத்தில் அப்பூரணத்தின் விளிம்புகள் கரைவதை நம் அகம் நோக்க மறுக்கிறது. நிலவை விழுங்கும் பாம்பென இருள் மூடிக்கொண்டாலும் எங்கோ அப்பூரணம் நிலை கொண்டிருக்கிறது என உளத்தை ஆற்றுகின்றன. நாம் கனவுகளின் குழவிகள் கூத்தரே. கனவையன்றிப் …
