111: மெய்த்தோழன் : 02
வலைக்குள் வலையென நுண்ணியும் விரிந்தும் அகன்றும் உருவாகிய புலிகளின் குழு முற்றொருமை கொண்டு பிற குழுக்களைத் தாக்கி அழித்து அரசாணை கொண்டெழுந்த போது அரசு சூழ்தலின் தலைமைப் பொறுப்பினை தமிழ்ச்செல்வனிடமே காலம் கையளித்தது. சூர்ப்பனகர் அவர்களது மதியூகியர்களில் முதன்மையானவராக இருந்தார். எதை எங்கு எதன் பொருட்டு எங்கனம் உரைக்க வேண்டுமோ எச் சொல் எக்காலத்தில் கனிந்து கனியாக வேண்டுமோ அதை அவ்வாறே விதைத்து அறுக்கும் வல்லமை கொண்டவரென அவரை மதியூகிகள் …
