தீக்குடுக்கை : புத்தகச் சந்தை

எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘தீக்குடுக்கை’ நாவல் சென்னை புத்தகச் சந்தையில் கிடைக்கவிருக்கிறது. அனோஜனின் மூன்று சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பின்னர் வெளிவரும் முதல் நாவல். அனோஜனுக்கு வாழ்த்துகள். சென்னை புத்தகக் கண்காட்சி ~ 2025 சால்ட் பதிப்பகம் வெளியீடு- 1 தீக்குடுக்கை ( நாவல் )

தன்னறம் விழா : இடமாற்றம்

ஷோபா சக்திக்கான தன்னற இலக்கிய விருது விழா நிகழ்வு இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நாள்: 28 டிசம்பர் 2024நேரம்: காலை 10 மணிஇடம் : நெல்லிவாசல் மலை கிராமம்

தன்னறம் விருது : ஷோபா சக்தி

“இலக்கியம் ஒருபோதும் சலிப்பை உண்டு பண்ணாது. அது உங்களைப் பண்பட்ட உயிரியாகப் பக்குவப்படுத்தும். இலக்கியம் உங்கள் மனதைச் சமநிலையில் வைத்து உங்களை நிதானப்படுத்தும். பொறுமையையும், அன்பையும், காதலையும் இருதயத்தில் கசிய விட்டவாறேயிருக்கும். வெறுப்பையும் பகையுணர்ச்சியையும் கழுவித் துடைக்கும். என்னுடைய நண்பர்கள் வாழ்க்கையைக் குறித்துப் புகார் சொல்லும் போதெல்லாம், நான் அவர்களுக்கு இலக்கிய வாசிப்பையே பரிந்துரைக்கிறேன். உங்களது நெற்றிக்கு நேரே துப்பாக்கி பிடிக்கப்பட்டிருக்கும் போது, கடவுளை நினைக்காதீர்கள்! மனைவி பிள்ளைகளை நினைக்காதீர்கள்! …

சங்கறுத்துக் குருதிப்பலி

இலக்கியம் மனிதர்களுக்குள் தூர்ந்து போய்க் கொண்டிருக்கும் கற்பனை எனும் ஊற்றை வெட்டி ஆழமாக்கும் ஒரு கருவியாகப் பயன்படுவது. வாழ்க்கை பற்றிய பார்வைகளை உண்டாக்கிக் கொள்ள வாசிப்பு ஒரு மனிதரை எப்படி நகர்த்துகிறது என்பதற்கு வாசகரும் புத்தக வியாபாரியுமாகிய செந்தில்குமாருடைய இந்த நேர்காணல் ஒரு உதாரணம். அவரது சொற்களில் உள்ள கள்ளமின்மை இலக்கியம் மனிதரை எங்கனம் பண்படுத்துகிறது என்பதற்கு ஒரு சாட்சி.

Master class

பரிசல் கிருஷ்ணா ஜெயமோகனிடம் கேட்கும் கேள்விகளுக்கு ஜெயமோகனின் பதில்கள் இன்று எழுத வரும் இளைஞர்களுக்கும் வாசகர்களுக்கும் மிக அடிப்படையான வரையறைகளை முன்வைப்பது. கடுமையான நோன்பிற்கான ஆசார விதிகளைப் போலத் தோன்றுவது. இலக்கியத்திற்கெனத் தன்னை ஒப்புக் கொடுப்பதற்கான பலியைக் கேட்பது. இந்த நேர்காணலில் ஜெயமோகன் துல்லியமான அவதானிப்புகளை எடுத்துரைக்கிறார். சமூக வலைத்தளங்கள் தொடர்பிலும் சமூக சராசரிகள் பற்றியும் அவர்களது வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார். கலைக்கென ஒருவர் கொண்டிருக்கும் தீவிரம் மட்டுமே …

ஒரு வியத்தல்

கவிஞர் இசையின் வலைப்பூவில் அண்மையில் அவர் பதிவிட்டிருந்த கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு கவிதைகள் கவனத்தை ஈர்த்தன. முதலாவது கவிதை ‘ஒன்று விட்ட சித்தப்பா’. அக்கவிதையின் சொல்லொழுக்கில் ஒரு நீர்வீழ்ச்சியின் அழகு கொண்ட மொழி வீழ்கிறது. மனிதர் துவண்டு நம்பிக்கையிழக்கும் பொழுது அளிக்கப்படும் சொற்கள் கொள்ளும் பேரழகைக் கவிதையெனவும் சொல்லலாம். தெய்வீகம் என்பது தருணம் தான். அக்கணத்தில் அந்தச் சித்தப்பாவின் நாவில் எழுந்தது மானுடம் எனும் அகலாப் பெருநெருப்பின் நீர்மை. …

கவிஞர்களைக் காதலிப்பவன்

எல்லாக் கவிஞர்களையும் காதலிக்கும் வினோதமான நோய் கொண்ட ஒருவனைப் பார்த்தேன். அவன் குரலில் மிதமான கார்வைசோப்பு நுரைக் குமிழிக்குள் காற்றெனஉடையக் காத்திருந்தது அவன் விழிகளில் பூமியை வெல்லும் ஒரு வானவில்லின்ஏழுவண்ணங்கள் இழுபட்டிருந்தன அவன் இதயத்தில் ஒவ்வொரு கவிஞரும் ஒரு இருக்கையை எடுத்துப் போட்டுக் கொண்டுசிலர் கால் மேல் கால் போட்டபடியும்சிலர் யோக அமர்விலும்சிலர் குடித்து விட்டு மேசைகளின் மேலிருந்து ஒரு கரம் உயர்த்தியபடியும்சிலர் கஞ்சா புகைத்த செவ்விழிகள்இரத்தினக் கற்களென மினுங்கும் …

காதற் கடிதம் வாசிப்பவன்

கவிஞர் சபரிநாதனின் குமரகுருபன் ஏற்புரை தனித்துவமானது என எண்ணுவதுண்டு. தயங்கித் தயங்கி உண்மையைச் சொல்லும் சிறுவனைப் போலவும் யாருக்கென எழுதினாரோ அவருக்கே வாசித்துக் காட்டும் காதல் கடிதத்தின் இசையுடனும் இவ்வுரையை ஆற்றியிருப்பார். இப்பொழுது கேட்டாலும் அதே இனிமை.

மகத்தான ரத்தத்துளி

கலை இலக்கியங்களில் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய ரொமாண்டிசிசக் காலகட்டம் அதற்கு முந்தையதான அறிவொளிக் காலகட்டம், கைத்தொழிற்புரட்சி காலகட்டத்து சிந்தனைகளுக்கு எதிர்வினையாக இயற்கையின் ஒரு பகுதியாக மனிதரையும் வாழ்வையும் முன் வைத்தது. கற்பனை, தனிமனித பார்வை மற்றும் இயற்கையை வியத்தல் ஆகியன பகுத்தறிவின் தர்க்கத்திற்கு அப்பாலான வாழ்வை நோக்கும் வழியென முன்வைத்தன. கைத்தொழிற் புரட்சியின் பின்னரான காலகட்டத்தில் பிரமாண்டமான தொழிற்சாலைகளும் கட்டடங்களும் நகரங்களின் உருமாற்றமும் வேகமாக நிலக்காட்சியை மாற்றியமைக்கத் தொடங்கின. இயற்கையை …

நகைச்சுவைக்கு இலக்கியத்தில் இடமுண்டா?

இலக்கியமே ஒரு நகைச்சுவை தான் என நம்புவது சமூக சராசரிகள் மட்டுமல்ல. ஈழத்தின் பல எழுத்தாளர்களும் தீவிரமாக நம்புவது அப்படித் தான் என எனக்கு எண்ணமுண்டு. ஆனால் இவர்கள் எண்ணுவது போல அல்லாமல் இலக்கியத்தில் நகைச்சுவை உண்டு. அது ஒரு அம்சம். ஆளுமையின் ஒரு பகுதி. ஒரு திறப்பு. ஒரு கிரியேட்டிவ் தருணம். வீட்டின் ஒரு பக்கம் என்பதைப் போல. தமிழ்நாட்டு இலக்கியவாதிகளில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளையவர்கள் வரை …