122: ஆழிசூடிகை : 02
ஆழிவெண் சங்குகளின் பளபளப்புடன் மேனியுருகிக் கருஞ்சங்கென மினுக்குக் கொண்டிருந்த இருதியாளை இமை சிதறாது நோக்கியிருந்த வேறுகாடார் அவளின் அருகில் சென்று சலனமின்றி கடலை நோக்கினார். கடல் மாபெரும் கரும் போர்வையால் மூடப்பட்டு அதனுள் எஞ்சிய ஒளிகொண்டு நோக்குபவர் எனத் தன்னை உணர்ந்தார். போர்வைக்குள் என எண்ணமெழுந்த போது அவரது பெருமேனியில் மெய்ப்புல்கள் எழுந்தன. நிலத்தினடியில் ஓடும் நீர் ஒவ்வொரு வேரையும் தொட்டு எழும் புற்காடென அவர் தன்னுள் ஓடும் குருதியை …
