நீலி : பெப்ரவரி இதழ்

பண்பாட்டு பெண்ணிய உரையாடல்களை முன்னெடுக்கும் நீலி இதழ் வெளிவந்துள்ளது. தொடர்ச்சியாக தீவிரமாக நிகழ்த்தப்படும் எந்த உரையாடலும் நீண்ட காலநோக்கில் பாதிப்புகளை உண்டாக்கக் கூடியது. இதழ் குழுவினருக்கு வாழ்த்துகள். நீலி : பெப்ரவரி

Influencers

ஈழத்துச் சூழலில் இலக்கியம் மற்றும் செயற்களங்களில் என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று எனது சிந்தனைகளின் வழி என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் பாதிப்பை நிகழ்த்துகிறேன் என்பது. அச்சுற்றியுள்ளவர்கள் என்னைப் போலப் பேசுகிறார்கள் என்பது. உண்மையில் பாதிப்பைச் செலுத்துமளவு சில அடிப்படை விடயங்கள் சார்ந்த அறிவுழைப்பும் செயற்கள உழைப்பும் கொண்டவனாகையால் எனக்கு அவ்விதமான இயல்புகள் உண்டு என்பதை அறிவேன். உரையாடல்களின் வழி உண்டாகும் சிந்தனைத் தாவலை நண்பர்கள் கேட்டுக் கொண்டிருப்பது அதனாலேயே. இதனை …

மாயப்பாறை : மதார் கவிதைகள்

அகழ் இணைய இதழில் மதாரின் மாயப்பாறை கவிதைத் தொகுப்பைப் பற்றிய இசையின் நோக்க நோக்கக் களியாட்டம் என்ற கட்டுரை நல்லதொரு அறிமுகம். மதாரின் கவிதைகளில் இழையோடும் தீக்கணங்கள் வியப்பூட்டுபவை. மெல்ல உதடுகளுக்குள் புன்னகை அலைகளென வீசக் கூடியவை. அவரின் கவிதைகளில் ஒன்று, “உன்னைத் திருமணம் செய்துகூட்டிப் போவதுதாயின் கருவறையிலிருந்துவெளிவந்த உன்னைதோளில் தூக்கிப் போட்டுபோவது போலத்தான்.நீ அழுது தூங்கிவிழிக்கும்போதுநான் உனக்குத் தாயாகியிருப்பேன்.தந்தையுமாகியிருப்பேன்தொட்டிலில் உன்னைப் போட்டு ஆட்டுவேன்பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும்”

ரத்த சிம்பனி

சில கவிதைகளின் வரிகள் நன்கு பழகியதும் அறிந்ததுமான தங்கத்தாலான சிம்மாசனத்தை நோக்கிய படிக்கட்டுகள் போலிருக்கும். அதன் ஒவ்வொரு அடியையும் நாம் அறிந்தது தான். ஆனால் திடீரென்று ஒரு பொறிக்கணத்தில் அங்கு ஏற்கெனவே இருந்த பொற்சிம்மாசனத்திற்குப் பதிலாக புதிதாக ஒன்றை வைக்கும் பொழுது உருவாகி வரும் அழகு கொண்ட கவிதைகள் சிலவற்றை அண்மையில் வாசித்தேன். கவிஞர் வெய்யில் எழுதியிருக்கும் இக்கவிதைகள் பார்ப்பதற்குப் பழகியவை போலிருந்தாலும் புதிய சிம்மாசனங்களின் கூசும் ஒளி கொண்டவை. …

அமைப்பு, செயல், நெறிகள்

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மூன்று அமைப்புகளில் செயற்பட்டவன் என்ற அடிப்படையில் ஜெயமோகனின் அமைப்பு பற்றிய விளக்கங்கள் பொருள் பொதிந்தவை என அனுபவ அடிப்படையில் சொல்ல முடியும். மேலதிகமாகச் சில விடயங்களைக் குறிப்பதென்றால் ஒன்று, அமைப்புகளை அல்லது இலக்கியக் குழுக்களை அரசியல்மயப்படுத்துகிறேன் எனும் பேர்வழியில் நுழைந்து தன் சொந்த அரசியல் திட்டங்களை பாம்பு தலையை நுழைப்பதைப் போல போட்டுக் கொள்பவர்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டும். முதலில் பரந்துபட்ட சிந்தனையாளராக முற்போக்காளராகத் தோன்றுபவர்கள்   …

கூட்டத்துடன் தனித்திருத்தல்

ஜெயமோகனின் இந்த உரை இன்றைய கால மனிதருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய இயல்புகள் பற்றிய கூர்மையான அவதானிப்புகளைக் கொண்டது. ஒரு எழுத்தாளராக கூட்டத்தையும் தனித்திருத்தலையும் பயின்று வருவது என்னளவில் மிக அடிப்படையான வாழ்முறையாக மாறி வருகிறது. இந்த உரையின் சிந்தனைகளை ஒருவர் தன் சிந்தனையுடன் மோதிப் பார்த்துக் கொள்ளலாம்.

ஒஷோ : ஓர் உரை

ஓஷோவை அறிவதில் உள்ள சிக்கல் அவரை ஒரு ஊழ்க சாமியாராக எண்ணுவதில் உள்ளது. ஒஷோ அவரே தன்னைச் சொல்லிக் கொண்டது போல ஒரு அழைப்பு. அவரது சிந்தனைகள் ஒரு கூர்மையான தொல் ஆயுதங்கள் போன்றவை. அவற்றைக் கொண்டு நாம் சிந்தனையில் உண்டாக்கிக் கொண்டிருக்கக் கூடிய கற்சுவர்களை உடைக்க வேண்டியிருக்கிறது. ஜெயமோகனின் இந்த உரை ஓஷோவை அணுகுதலின் இன்னொரு கதவைத் திறப்பது.

பேய்க் கதை

ஒரு கதைக்கென உண்டாகும் வரலாற்றுப் பின்னணி அக்கதையின் வடிவத்தையும் வெளிப்பாட்டு நுட்பங்களையும் மாற்றிக் கொள்வதை ஜெயமோகன் சுவாரசியமாக விளக்கும் காணொலி இது. பேய்க் கதை கதைக்காமல் போ என்ற ஈழத்து வட்டார வழக்கில் உள்ள பகுத்தறிவுடன் அன்றி இலக்கியம் என்னும் கனவுடன் அணுகும் வாய்ப்பை திறப்பது.

எங்கோ ஒரு கிளி

வியாசர் பற்றிய ஜெயமோகனின் இந்த உரை பண்பாட்டில் நீடிக்கும் காவியத்தின் தன்மை பற்றிய அக மற்றும் புறச்சித்திரத்தை கொடுப்பது. ஒரு கதையும் கதையாசிரியரும் தொன்மமாகி மிளிரும் காலத்திலிருந்து அதைச் சிந்திப்பது.

கவிதைகள். In

கவிதைகளுக்கான இணைய மாத இதழாக வெளிவரும் கவிதைகள்.in இன் ஜனவரிக்கான இதழ் வெளிவந்திருக்கிறது. மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின் ஆகியோர் இவ்விதழின் ஆசிரியர்கள்.