102: இளமழைத் தூவல்
சுவடிகை வலக்கரத்தின் முழங்கையை இடக்கர விரல்களால் பற்றிக் கொண்டு ஒசிபவள் போல நடந்து வந்ததை தொலைவிலிருந்தே நோக்கினார் வேறுகாடார். அவள் கழுத்தில் தூங்கிய வெள்ளிப் பதக்கம் காரிருட்டில் வெள்ளி நிலவு என மினுங்கியது. மென் தூவல்கள் இமைப் பீலியளவில் வீழ்ந்து கொண்டிருந்தன. காற்றின் ஈரலிப்பு இனியதெனத் தோன்றியது. இடையில் தென்றல் சுமந்து வந்த குளிர் மலர்கள் முட்டுப்படுவதைப் போல மேனிகள் மெய்ப்புக் கொண்டன. அரசர் எழுந்த செய்தி மஞ்சத்தறைக்கு நுழைந்த …
