91: குழவி நாகங்கள்
உசை “நீலா நீலா” என மிழற்றிக் கீச்சிய போது தானகி விழித்துக் கொண்டாள். நிலவையின் இடையில் அணைத்துக் கிடந்த தனது கைகளை மெல்லிய நடுக்குடன் விலக்கிக் கொண்டாள். நிலவை வேலெறிய ஓடுபவள் போல துயிலமைவிலிருந்தாள். தானகியின் விழிகள் மஞ்சத்தறையைச் சுழன்று நோக்கியது. மழலைகள் விளையாடிய மனையெனக் குலைந்த மஞ்சத்தறையை உதட்டில் சிரிப்புச் சுழியெழ நோக்கியவள் லீலியாவையும் சுவடிகையையும் நோக்கி அவர்கள் எப்போது வந்தார்கள் என நினைவைப் புரட்டிச் சலித்தபடி எழுந்தாள். …
