110: மெய்த்தோழன்
அரண்மனை வாயில் கோபுரத்தில் நின்ற இளம் புலிவீரர்கள் இளமழைக்கு ஒடுங்கி கோபுர அறைகளில் ஒதுங்கியிருந்தனர். மூங்கில் ஏணியால் மேலேறிய தமிழ்ச் செல்வனைக் கண்ட போது பதைபதைத்து தம் இடங்களுக்கு மீண்டு கொண்டிருக்க கையால் சைகை காட்டி அறைகளுக்குச் செல்லும்படி கூறினான் தமிழ்ச்செல்வன். பிடிகோலை மீளவும் ஊன்றிக் கொண்டு மெல்லிய நடையுடன் உடலை ஒருக்கிக் கொண்டான். பச்சை மேலாடை காற்றில் பறந்து கொண்டிருந்தது. இளவெண் இடையாடை அணிந்திருந்தான். கூத்தனொருவன் அம்பலம் ஏறியதைப் …
