இவள் பிறிதொன்றின் தெய்வம் என அதிர்ந்தான் பொன்னன். சொல்லில் எழும் மயக்கிற்கு அப்பால் எங்கோ ஒரு தொல்முனையில் வீற்றிருக்கும் மானுடர் அறிய ஒண்ணாத மானுட தெய்வம். இவளை அறிந்தால் மானுடம் தன் முதல் கூழாங்கல்லை அழகுடன் தொட்டு நோக்கியவருக்கு அதன் அழகுமை எதனால் தோன்றியதென்ற…
Category: அழிகளம்
99: எதிராட்டக்காரி
சுவடிகை லீலியாவைச் சென்று எழுப்ப விழைந்தாள். சத்தகன் முன்முகப்பிலிருந்து ஆழிக்கரையை நோக்கிச் சொல்லற்று நின்றிருந்தான். கோட்டையின் காவல் நிலைகளில் நின்றிருந்த புலிவீரர்கள் தீப்பந்தங்களினை நூர்த்தபடி சூரிய ஒளியில் கவசங்கள் மினுங்க பணிகளை ஒருக்கிக் கொண்டிருந்தனர். காகங்கள் வாயில் மீன்முட்களைக் கொணர்ந்து முன் முகப்பில் வீசுகின்றன…
98: ஊர்தி : 02
வேறுகாடார் நிமிர்ந்து கொண்டு உலகளந்தோனின் வருகையை நோக்கிக் கொண்டிருந்தார். “வருக. இளையோனே. பணிகள் ஒருக்கியாயிற்றா” என்றார். “நான் சென்ற பணிகள் எப்போது முற்றுறாமல் போயிற்று மூத்தவரே. அனைத்தும் சிறப்பாய் நிகழ்ந்தன. களியாடி உங்கள் இளமை மீண்டிருக்கிறது போல முகம் பிரகாசமாக இருக்கிறது” எனச் சொல்லிச்…
97: ஊர்தி
“எனது காமம் உடலில் நிகழ்வதில்லை பொன்னா. உடலை ஊர்தியாக்கிக் கற்பனையிலேயே என்னைக் கண்டு கொள்கிறேன். நான் முற்று விழையும் ஆணென்று ஒருவரைப் புடவியால் ஆக்கியளிக்க ஒண்ணாது. நான் என்ற இருப்பிலிருந்து மேனி கடந்து எழும் இருத்தல் நான். என்னை நீ உன்னுடையவள் ஆக்க இயலாது….
96: தணல் மலர் : 02
“என்னவாயிற்று இளையோரே. களி காலத்திலும் கலைப் பூசல்கள் தேவையா” என்றார் வேறுகாடார். இளம் பாணன் எழுந்து சென்று சாளரத்தின் அருகிருந்த மரப்பெட்டியில் சாய்ந்து கொண்டு தீயிலைத் துதியை உறிஞ்சினான். “கலைப் பூசல்களுக்குப் பருவமோ பொழுதோ இல்லை கிழவரே. இது எளிமையான பூசல் தான். நான்…
95: தணல் மலர்
விழைவுகளில் நான் பெருங்களி எனச் சொல்லி குயில் போலச் சிரித்த விருபாசிகையில் புலரியின் பனி மேகத்தில் ஊறும் நீரெனத் திரண்டிருந்தது. கூந்தலின் இழைகள் மஞ்சம் போல மலர்கள் உதிர்ந்து தூங்கியது. இரவு எழுந்து மனை சென்று நடுநிசியின் பின்னர் திரும்பியிருந்தாள். தேகத்தில் களிமினுக்கு ஏறி…
94: பாற்கடலிகள்
முதிய மருதமரங்கள் கலகலத்து வீசிய புலரிக் காற்று முதுகிலறைய புலிகளின் இளம் வீரர்கள் குழுவொன்று வனவிளிம்பைக் கடந்து பட்டினத்தை நோக்கிய நீண்ட பெருஞ்சாலையில் நுழைந்தது. ஆதவனின் ஒளிப்பற்கள் முதுகில் மழலைக் கடியென வீழ்ந்து கொண்டிருந்தது. வற்றியுலரும் ஆறெனக் குடிகளின் பெருக்கு அடங்கியிருந்தது. புலரியின் இனிய…
93: குருதி வேலன்
முன்முகப்பின் மேற்கூரையின் மேல் ஆயிரக்கணக்கான புறாக்கள் குறுகுறுத்துக் கொண்டிருக்குமொலிகள் பாதத்தில் ஆற்றங் கரை மணல்கள் உருள்வது போலத் தோன்றியது சுவடிகைக்கு. அவளது ஒளிக்கூச்சலிடும் விழிகளை அசைத்து புறாக்களின் குதுகுதுப்பான மேனிகளை நோக்கினாள். ஒவ்வொன்றும் பருத்தவை போலத் தோன்றின. கழுத்தின் ஆரங்களில் மென்காலையொளி சங்கிலிக் கதிர்களென…
92: மணநாள்
பனிக்காற்று முன்முகப்பின் கருங்கல் வளைவுகளில் தாவியார்த்து மேவியது. அரண்மனையின் காவல் கோபுரங்களில் தீப்பந்தங்கள் நாவடக்கத் தொடங்கின. சத்தகனை நோக்கியபடியே “என்னவென்பதை அறிக இளையோனே. அவள் உன் களித்தோழியென உடனிருக்க வேண்டுமென என் அகத்தில் வண்டொன்று சுற்றிப் பறக்கிறது. உனது நெடுங்காலத் தனிமையை நான் விரும்பியிருக்கவில்லை…
91: குழவி நாகங்கள்
உசை “நீலா நீலா” என மிழற்றிக் கீச்சிய போது தானகி விழித்துக் கொண்டாள். நிலவையின் இடையில் அணைத்துக் கிடந்த தனது கைகளை மெல்லிய நடுக்குடன் விலக்கிக் கொண்டாள். நிலவை வேலெறிய ஓடுபவள் போல துயிலமைவிலிருந்தாள். தானகியின் விழிகள் மஞ்சத்தறையைச் சுழன்று நோக்கியது. மழலைகள் விளையாடிய…