தமிழின் அகமும் புறமுமான கவிதை அடுக்குகளுக்குள் இரண்டின் வெளிகளுக்குள் நுழைந்து மீளும் தன்னிலைகள் ஈழத்தமிழ்க் கவிதைகளில் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. சண்முகம் சிவலிங்கம் அவரது அரசியல் கவிதைகளுக்காக தொடர்ந்து கவனிக்கப்படுபவர். அவரது அரசியல் கவிதைகள் நீரின் ஆழத்தொலிக்கும் மெளனமும் அதன் மேலெழும் புயலைப் போன்ற சீற்றமும்…
Category: ஆக்கங்கள்
காட்டருவியின் சுனை
ஒரு மொழியின் பிரக்ஞைக்குள் முதற்குரல்கள் உருவாகும்போது அவை சீற்றமும் அலைவும் கொண்டவையாகவே எழும். எந்தவொரு முதற்குரல்களும் மொழியில் நுழையும் தன்மை அதுவே. நவீன பெண் தன்னிலை தனது அரசியலை வெளிப்படுத்திய முதற்குரல்களில் ஒருவர் செல்வி. இன்று வாசிக்கக்கிடைக்கும் செல்வியின் கவிதைகள் அளவில் மிகக் குறைவானவை….
மகிழ்ச்சியான உறுமல்
மொழிக்குள் நொதித்து மொழியைச் சீவித் தன் கலயத்தில் வார்க்கும் கலைஞர்கள் நிகழ்வதுண்டு. தமிழுக்குள் பனைகளின் முலையெனத் திரண்ட மொழி வெய்யிலினுடையது. பனைகள் நெடிது நிற்பவை, இரண்டு காதுகளில் இரண்டு கலயங்கள் தொங்கும் பனை, முதுதாயின் தோற்றம் கொண்டது, வடலிகள் சிறு கரங்கள் நீட்டி விளையாட்டுடன்…
இளங் கோதல்
மொழிக்குள் துணிச்சலுடன் நுழைந்து விட்ட திருடனொருவன் அதன் யாருமறியாத பொக்கிஷங்களை அள்ளித் தன் குகைக்குள் சேர்ப்பது போல் தமிழுக்குள் நுழைந்த கள்வன் இசை. அநாயசமான தோற்றம் கொண்ட எளிமையான கள்வன் என்ற தோற்றமே இசையின் கவிதைகளை வாசிக்கும் போது எழுவது. இன்னொரு தருணத்தில் மொழிக்குள்…
கண்ணீர் மிக்க ஒளியுடையது
ஈழக் கவிதைகளின் மொழியுள் தேச விடுதலை என்ற கனவுடன் எழுந்த கவிஞர்களில் அக்காலம் முழுவதிலும் அதன் பின்னரும் சக பயணியாயும் சாட்சியாயும் எழுதப்பட்ட கவிதைகள் கருணாகரனுடையவை. அவரது மொழி தளும்பும் குடத்தின் நீராட்டம் போன்றது. அதற்குள் எப்பொழுதும் முடிவுறாத குற்றவுணர்ச்சிகளினதும் பொறுப்பேற்றலினதும் குரல் தளும்பிக்கொண்டேயிருக்கும்….
குழந்தையின் திகைவிழிகள்
இயற்கையுடன் கவிஞரொருவர் நிற்கும் ஒளிப்படங்கள் எப்போதும் என்னை ஈர்ப்பது, அவரும் அவ் இயற்கையின் பகுதியென உணர்வதன் அறிதலளிக்கும் மகிழ்வு அது. மரத்தடியில் நிற்குமொருவர் அதன் பூவோ காயோ கனியோ வேரோ விழுதோ ஆகுபவர். நீர்வீழ்ச்சியின் அருகில் நிற்பவர் அதன் பெரும் வீழ்வோ உறையும் கற்பாறைகளோ…
புலிக்கு அதன் உடலே கானகம்
பெண் தன்னிலை தன் இருப்பின் திறவுகளுக்கு மொழியின் பிரக்ஞ்ஞையில் அறுக்க வேண்டிய தளைகளை, கவிதை ஒரு தோட்டக்காரரைப் போல் தேவையற்றதை வெட்டி, தேவையானவற்றைப் பராமரித்து நீரூற்றிப் பாதுகாத்து வருகிறது. மொழிக்குள் பெண் குரல்கள் தனது வாழ்வின் ஆதார விசைகளின் உந்துதலை தன் உடல் களைய…
பொன் வாள்
மொழிக்குள் சில கவிஞர்கள் அரிதான ஒருங்கிணைவுகளைப் பெறுவார்கள். ஒரு மக்கள் திரளின் கூட்டு மனத்தின் பொன் வாளென அவர்களது கவிதைகள் திரண்டு வருவன. அவை போருக்குரியவை அல்ல. அம்மக்களின் அகத்தின் ஒவ்வொரு இழைகளும் நுட்பங்களும் உருகித் தங்கமென வழிந்து, பரவி, இறுகி, பிடியிடப்பட்டு, கூர்…
ஒரு குட்டி நட்சத்திரம்
மொழிக்குள் அரசியல் பிரக்ஞை உள்நுழைவது கத்தியால் அதன் இதயத்தைக் கீறி அதை மீளத் தைப்பதைப் போன்றது. அதன்பின் அதுவரையான மொழியுடல் வெட்டப்பட்ட மரமொன்று மீளத்துளிர்ப்பதைப் போல, மெல்ல மெல்ல வளர ஆரம்பிக்கின்றது. சிவரமணியின் கவிதைகள் மொழிக்குள் சீழ்பிடித்திருந்த ஆணாதிக்க சமூக ஒழுங்கைக் கத்தியால் வெட்டியகற்றும்…
நூல் பிறையளவு கொடை
கசந்து வெண்ணிறமாகப் புன்னகைக்கும் மொழி பிரான்சிஸ் கிருபாவினுடையது. மொழி ஒரு கோப்பை வைன் என்றால் அதன் ஆயிராமாண்டு காலத் துயர் பிரான்சிஸின் சொற்களில் வடியும் கைப்பு. வாழ்வின் உவர்ப்பளிக்கும் அந்தரத்துடன் கத்திக் கொண்டு எதிர்ப்படும் மொழி, பைத்தியம் நிறை சொற்களால் இன்னொரு அகத்தை கையில்…