Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Month: August 2024

109: அன்னைக்கடல் : 02

Posted on August 31, 2024

ஆழியை விழிகளால் அணைத்தபடியிருந்த இளநீலனின் அருகில் அவனது முதல் தனுசு பாணங்களற்றுத் தனித்திருந்தது. குழல் காற்றில் மெல்ல விசிறும் மழையில் இலைத்தழைப்புகளென ஆடின. இளஞ் செவிகளில் குண்டலங்கள் மொட்டு உலகுகளெனச் சுழன்று கொண்டிருந்தன. இடையாடையை முழங்கால் வரை உயர்த்திக் கொண்டு கால்களை ஆமைத் தலையென…

108: அன்னைக்கடல்

Posted on August 30, 2024

மா என்று கடல் இரைந்து அழைத்துத் திரும்பும் ஓராயிரம் ஒலிகளைப் புலரி முதல் கேட்டபடி இளமழையின் சின்னக் காலடிகள் கரைமணலில் நடப்பதை ஓய்வேயில்லாமல் திண்ணையில் சாய்ந்தபடி நோக்கியிருந்தார் நீலனின் அன்னை உமையம்மாள். ஒவ்வொரு மா வும் ஒரு மழலையின் அழைப்பு என செவிகளில் குளிர்…

107: இளமழை விளையாட்டு : 02

Posted on August 29, 2024

சாலினியின் சிறுசெவியை முயலின் காதெனப் பற்றியபடி ஏசிக் கொண்டு அவளைத் திண்ணை நோக்கி இழுத்துச் சென்றாள் இளந்தாய். முதுபெண்டிர் சாலினிக்காகப் பரிந்து பேசினர். அவள் இளையவள். குறும்பினி அவளை விட்டுவிடு எனச் சொல்லி சாலினியின் சிணுங்கல் முகத்தை நோக்கினர். அகம் கரைப்பது போல முகம்…

106: இளமழை விளையாட்டு

Posted on August 28, 2024

நீலனின் பின்னுருவைக் கண்டு அவன் உடலில் எழும் வனப்பை நோக்கிக் கொண்டே சுவடிகையின் சடசடவென வெடிக்கும் வினாக்களுக்கு தலையை அசைத்தபடி சீரான தாள அடிகளுடன் நடந்தாள் நிலவை. இளமழை அனைவரின் மீதும் தழைந்து இறங்கி ஒட்டிக்கொண்டிருந்தது. சத்தகன் நீலனுக்கு வேடிக்கை சொல்லி உரக்கச் சிரித்துக்…

105: மடப்பெண்ணே : 03

Posted on August 27, 2024

“தாகத்தை அறியவும் கற்கவும் பயிலவும் மேலும் கற்று முற்றறிந்து அமையவும் இயலாதவர் விடாயை அனுபவிக்கவும் தீர்த்துக் கொள்ளவும் நீங்கவும் இயலாது. மானுடர் தங்கள் விழைவுகளின் ஊற்றுமுகங்களை கண்டடைதலே பாதையினைத் தேரும் முதல் நிகழ்வு. அடுத்து அதைச் சொல்லில் கற்க வேண்டும். மானுட விழைவுகள் அனைத்தைக்…

104: மடப்பெண்ணே : 02

Posted on August 26, 2024

பெரும் புற்காட்டிடை புலி மறைவதென பொன்னனின் நோக்கிலிருந்து முத்தினி அகல விழியருகில் குவிந்து மிதக்கும் மின்மினிப் பூச்சிகளென ஒளியுவகை கொண்டு எழுந்து நெருங்கி அவனது முகம் நோக்கினாள் செழியை. எப்பொழுதும் பரபரக்கும் செழியையின் விழிகள் இப்பொழுது ஒருகணத்தை முழுதளப்பதற்கு ஒரு முழுப் புடவியை விழிகளில்…

103: மடப்பெண்ணே

Posted on August 25, 2024

பொன்னன் மஞ்சத்தில் சரிந்து துயிலில் ஆழ்ந்தான். அவனது இடையாடை உருவி நழுவுவதை அறிந்து எக்கல் வரச் சிரித்துச் சிரித்து அயர்ந்தான். சிலகணங்களில் இருநாவுகள் சண்டையிட்டு இருவாய்களில் ஆண்குறி நுழைந்து ஈரலிப்பில் தடித்துத் துடித்து சித்தத்தின் உச்சாணியில் மின்னல் கயிறொன்று பற்றியெரிகிறதென எண்ணி இது கனவு…

102: இளமழைத் தூவல்

Posted on August 24, 2024

சுவடிகை வலக்கரத்தின் முழங்கையை இடக்கர விரல்களால் பற்றிக் கொண்டு ஒசிபவள் போல நடந்து வந்ததை தொலைவிலிருந்தே நோக்கினார் வேறுகாடார். அவள் கழுத்தில் தூங்கிய வெள்ளிப் பதக்கம் காரிருட்டில் வெள்ளி நிலவு என மினுங்கியது. மென் தூவல்கள் இமைப் பீலியளவில் வீழ்ந்து கொண்டிருந்தன. காற்றின் ஈரலிப்பு…

101: அரக்கனின் காதல்

Posted on August 23, 2024

சத்தகன் தன் பெருங்கரங்களால் இளம் வீரர்களை தோள்களில் அறைந்து கொண்டு இன்சொற்கள் கூவிக்கொண்டு நலன் விசாரித்தபடி அவர்களை நோக்கி வாழ்க்கையைப் பற்றி ஓரிரு சொற்கள் சொல்லி நடந்து சென்றான். மேகங்கள் எங்கிருந்து எழுந்தவையென நோக்கி நின்ற சுடர் மீனனைக் கண்டதும் உவகை மின்னொளியென விரியும்…

100: எதிராட்டக்காரி : 02

Posted on August 22, 2024

இவள் பிறிதொன்றின் தெய்வம் என அதிர்ந்தான் பொன்னன். சொல்லில் எழும் மயக்கிற்கு அப்பால் எங்கோ ஒரு தொல்முனையில் வீற்றிருக்கும் மானுடர் அறிய ஒண்ணாத மானுட தெய்வம். இவளை அறிந்தால் மானுடம் தன் முதல் கூழாங்கல்லை அழகுடன் தொட்டு நோக்கியவருக்கு அதன் அழகுமை எதனால் தோன்றியதென்ற…

Posts pagination

1 2 … 4 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,176)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,011)
  • காதலின் முன் பருவம் (2,002)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,912)
  • விடுதலையில் கவிதை (1,901)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme