நம் காலத்து உளநலன்!

இப்படி ஒரு நற்துவக்கம் ஈழத்திலும் நிகழ்ந்தே ஆக வேண்டும். உளநெருக்கடிகளும் சமூக வலைத்தளங்கள் உண்டாக்கும் அடையாளச் சில்கல்களும் பலரையும் பாதித்திருக்கிறது. உளநலத்தைப் பற்றிச் சுட்டிக்காட்டினால் என்னைப் பைத்தியம் எனச் சொல்லி மூக்கில் வழியும் சளியை சட்டையில் லேஞ்சியைப் பின்குத்தி வைத்திருந்து சீறும் சிறுவர்களைப் போல நடந்து கொள்வார்கள். உள ஆரோக்கியம் எல்லோருக்கும் முக்கியமானது. மகிழ்ச்சியாக இருக்கவே வாழ்க்கை. கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனங்களால் சிந்திக்க முடியாது. தமிழகத்தில் இந்த நற்செயல்களில் மேலும் இணைத்து கொள்ளும் ஓர் நிகழ்வு.

*

செயல் துவக்கம்

மனித உறவுகள்
சமூகத்தின் படிநிலைகள்
குழந்தைகளின் அக உணர்வுகள்
வயோதிகர்களின் அந்திமக்கால நெருக்கடிகள்

என பலவித மனநிலைப்பாடுகளில் தவிக்கும் உயிர்களுடன்

38 வருட கால மனோதத்துவ அனுபவம் கொண்ட நண்பர்களால் உருவாக்கப்படும் மையம்

நற்றுணை

துயரில்
தனிமையில்
தவிக்கும் மனித மனங்களுக்கு நற்றுணையின் தொலைபேசி எண்ணைத் தந்து அவர்கள் வாழ்வில் ஒரு
மலர்களை உருவாக்குங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *