அஞ்சலி

ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆயுதம் தாங்கிய காலகட்டத்தின் முதல் தலைமுறை பெண் போராளியும் அதற்கெனச் சிறைசென்ற முதற் பெண்ணும் அகாலம் எனும் தலைப்பில் தன் வாழ்வனுபங்களைத் தொகுத்து முன்வைத்தவருமான முன்னோடிப் பெண் புஷ்பராணி அவர்கள் காலமாகியிருக்கிறார்.

அவரது பங்களிப்பும் பார்வைகளும் நமது சமூகத்தின் பல்தளங்களை உசாவி அறியும் அடிப்படைகளைக் கொண்டவை. விதை குழுமம் சார்பில் இலங்கை இனமுரண்பாட்டை விளங்கிக் கொள்ளல் எனும் தொடர் புத்தக உரையாடல்களைச் சில வருடங்களுக்கு முன்னர் நிகழ்த்தியிருந்தோம். அதில் அகாலமும் ஓர் உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் பெண்ணாகவும் எழுந்து நின்று தன் பார்வைகளை விடுதலைப் போராட்டம் தொடர்பில் முன்வைத்த முக்கியமான ஆளுமை அவர்.

இறுதியாக அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் இருந்த போது எனது வாழ்க்கைக்குத் திரும்புதல் கவிதை நூலின் முன்னுரையை வாசித்து விட்டு நண்பர் ஒருவரிடம் பாராட்டுகளை தெரிவித்திருந்தார். தன் இறுதிப்படுக்கை வரை வாசித்துக் கொண்டிருந்த முதன்மை ஆளுமைகளில் ஒருவருக்கு அஞ்சலிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *