தும்பி : 89

தும்பி 89 இதழ் அச்சில் மலர்ந்து எதிர்பார்த்து காத்திருந்த குழந்தைகள் கைகளில் சென்றடைந்துள்ளது. அன்றாட வேலைகள் நிறைய இருக்கும் பெரிய கரடிக்கும் விளையாடத் துடிக்கும் குட்டி கரடிக்கும் இடையே நிகழும் சுவாரசியமான சித்தரிப்புகளை கொண்ட கதை இவ்விதழின் பிரதான ஓவிய கதையாக வெளிவந்துள்ளது. எளிய வாசகங்களுடன் மென்மையான ஓவியங்களைக் கொண்டுள்ள இக்கதை உறவுகளின் பிணைப்பை, உழைப்பின் முக்கியத்துவத்தையும் அழகுற கற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.

மேலும், நண்பனுக்காக ஏங்கும் பனிக்கரடி ஒன்றின் குறும்பட கதையும், ‘நூல் மான்ஸ்டர்’ தோழமை அபி எழுதிய வெள்ளைக் கரடி பாடல், வண்ணம் தீட்டி விளையாட தோழமை வித்யா பெனோவின் ஓவியம், கரடிகள் பற்றிய சுவாரசியமான தகவல்களுடன் கூடிய வண்ணப் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. தும்பி இதழின் கதைகள் வழி துள்ளித் திரியும் கரடியெனக் குழந்தைகள் கனவுச் சிறகடித்து விளையாட மனதாரப் பிரார்த்திக்கிறோம்.

தும்பி

அட்டைப்படம் – ரா. ஆர்வின்
இதழ் வடிவமைப்பு: கல்ஆல், இரா. தியாகராஜன்

படைப்புகளை அனுப்ப / பேச/ இதழ் பெற:
9843870059, thumbigal@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *