நினைவுகளின் நிழலில் ஒரு வாழ்வு – இப்ராஹிம்

“…கல்விரல் என்ற பெயரே இதனோடு அழகாகப் பொருந்துகிறது. வீட்டின் பின்னால் தோண்டி எடுக்கப்படும் அந்தப் பெரிய பாறை ஒரு சிலையின் விரல். அது பின்னர் மனிதர்கள் கூடும் இடமாகவும், துளசிக்கும் அவளுடைய அம்மாவுக்கும் மனக்குமுறல்களைச் சொல்லித் தீர்க்கும் இடமாகவும் மாறுகிறது. ஒரு பொருள் எப்படி மனிதர்களின் நினைவுகளையும் துயரங்களையும் தாங்கிக்கொள்ளும் இடமாக மாறுகிறது என்பதற்கு அது ஒரு குறியீடாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அது அவர்களுக்குத் தெய்வமாகவும் மாறுகிறதோ என்ற எண்ணமும் எனக்கு எழாமல் இல்லை.

நிழல்கள் பற்றிய குறிப்புகளும் இதனோடு இணைந்துதான் வருகின்றன. அது நம்முடைய இருளா, பிரதிபிம்பத்தின் சாயலா என்று கேட்கத் தோன்றுகிறது. ஒருவகையில் அது நம்மை நமக்கே காண்பிக்கும் மறுஉருவாகவும் இருக்கிறது. போரின் நினைவுகளும் அப்படித்தான். நாம் கடந்து வந்துவிட்டோம் என்று நினைக்கும் ஒன்றின் நிழல் ஏதாவது ஒரு தருணத்தில் நம்முன் வந்து நிற்கிறது.

இந்த நாவலில் மற்றொரு சிறப்பம்சம், போரை வெற்றி–தோல்வி என்ற இருமைக்குள் மட்டும் வைத்துப் பார்க்காமல், அது ஒரு சமூகத்தின் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்று பார்க்க முயற்சி செய்திருப்பது. பெண் சுதந்திரம், சாதி அடுக்குகள், உறவுகள், மனிதர்களுக்கிடையிலான பிணைப்பு முதலிய பலவற்றிலும் அந்த மாற்றத்தைப் பார்க்க முடிகிறது.

(இப்ராஹிம்)

குறிப்பாக பெண்களைப் பற்றிய பகுதிகள் முக்கியமானதாகத் தோன்றின. இயக்கத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலை இருந்தாலும், பெண்களுக்குள் இருக்கும் காதல், பொறாமை, உடல்தேவை, குடும்ப உணர்வு போன்றவை அழிந்துவிடவில்லை. அவர்கள் தங்களுடைய உருவத்தையும் பாவனையையும் மாற்றிக்கொண்டாலும், அவர்களுக்குள் இருக்கும் உணர்வுகள் அப்படியே இருக்கின்றன. மனிதனுடைய இயல்பை ஒரு கொள்கையால் முழுமையாக மாற்றிவிட முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது”

இப்ராஹிம்

முழுமையான கட்டுரைக்கான இணைப்பு : நினைவுகளின் நிழலில் ஒரு வாழ்வு – இப்ராஹிம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *