வெள்ளி வீதி 2.0

 

முதலாவது வெள்ளிவீதி இலக்கியக் கூடுகை பிரான்சில் நிகழ்ந்திருந்தது. அடுத்த நிகழ்வு சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் நவம்பர் மாதம் 01 ம் திகதி இடம்பெறவிருக்கிறது. அதற்கான அமர்வுகளும் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. 

இலக்கியத்தின் மைய விசைகள் சிறு குழுவின் தீவிர உரையாடலின் வெளிப்பாடாகவே தன்னைத் தொகுத்துக் கொள்ள முடியும். கலைகள் தொடர்பாகவும் அப்படித் தான். விரிந்த பரப்பென்பது கடலின் மேற்பரப்பில் பெய்யும் மழையைப் போன்றது. கடலென்பது மழை பொழியும் மேற்பரப்பு மட்டுமல்ல. ஆழத்தில் உள்ள நீல இருள் கொண்ட உள்ளாறுகளும் கரிய இருட்டுக் கொண்ட சுரங்கக் குகைகளும் கொண்ட பெரும் பரப்பு. இலக்கியத்தின் சிறுவட்டமான உரையாடல்கள் அதனாலேயே கொந்தளிப்பும் தீவிரமும் கடுமையான ஆணவ மோதல்களும் விவாதங்களும் நிகழ்வதாக அமைகின்றது. அது ஆழத்தின் இயல்பு. ஆழத்தில் அது அவ்வாறு நிகழ்ந்து உச்சம் பெறும் போதே மேற்பரப்பு கொந்தளிப்பை அடைகிறது. கொதித்துச் சுழன்று பின்னர் அடங்குகிறது. 

இரண்டாவது வெள்ளி வீதி இலக்கியக் கூடுகையும் முன்னையதைப் போலவே எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் அவர்களுடனான உரையாடலையும் மையப்படுத்தியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நன்றே நிகழ்க. 

வெள்ளி வீதி பற்றி தர்மு பிரசாத் – வெள்ளி வீதி இலக்கியக் கூடுகை

வெள்ளி வீதி நிகழ்வுக் காணொலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *