அசட்டு நூல்கள் எனும் ஈழத்தமிழ் ஊழல்
அண்மையில் நண்பரொருவர் வன்னியூர் செந்தூரன் என்பவரின் வரலாற்று நூல்களை இருநூறு புத்தகங்கள் வாங்கப் போகிறேன், என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டார். வன்னியூர் செந்தூரன் எனும் பெயரில் ஒருவர் இருக்கிறார் எனத் தெரியும். சில புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஆனால் வெகுசனத் தளம் சார்ந்த எழுத்தாளர். தீவிர அறிவு மற்றும் இலக்கியம் பற்றிய உரையாடல்களிலோ விவாதங்களிலோ பொருட்படுத்தத்தக்க ஒருவர் அல்ல. வைரமுத்து வகையறாக்களின் போட்டோ கொப்பி அவர். அவரது முகநூலைப் போய் பார்த்தேன். …
