சர்ப்பத்தின் வால் நுனி

தமிழின் அகமும் புறமுமான கவிதை அடுக்குகளுக்குள் இரண்டின் வெளிகளுக்குள் நுழைந்து மீளும் தன்னிலைகள் ஈழத்தமிழ்க் கவிதைகளில் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. சண்முகம் சிவலிங்கம் அவரது அரசியல் கவிதைகளுக்காக தொடர்ந்து கவனிக்கப்படுபவர். அவரது அரசியல் கவிதைகள் நீரின் ஆழத்தொலிக்கும் மெளனமும் அதன் மேலெழும் புயலைப் போன்ற சீற்றமும் கொண்டவை. என்னளவில் அவரது அகக் கவிதைகள் மிக நுட்பமான வேலைப்பாடுகள் உள்ள ஆபரணங்கள் போன்றவை. பாலியல் வேட்கை, உறவுகள், தனிமை, ஆன்மீகம் என்று பல்வேறு …

காட்டருவியின் சுனை

ஒரு மொழியின் பிரக்ஞைக்குள் முதற்குரல்கள் உருவாகும்போது அவை சீற்றமும் அலைவும் கொண்டவையாகவே எழும். எந்தவொரு முதற்குரல்களும் மொழியில் நுழையும் தன்மை அதுவே. நவீன பெண் தன்னிலை தனது அரசியலை வெளிப்படுத்திய முதற்குரல்களில் ஒருவர் செல்வி. இன்று வாசிக்கக்கிடைக்கும் செல்வியின் கவிதைகள் அளவில் மிகக் குறைவானவை. ஆனால் அதன் இயல்பில் துல்லியமும் ஒருங்கிணைவும் கூடியவை. சீற்றமும் அலைவும் அக்கவிதைகளின் உடல். மொழிக்குள் மெளனம் திறந்து பேசும் காட்டருவியின் சுனையொன்று செல்வியின் மனதிற்குள் …

மகிழ்ச்சியான உறுமல்

மொழிக்குள் நொதித்து மொழியைச் சீவித் தன் கலயத்தில் வார்க்கும் கலைஞர்கள் நிகழ்வதுண்டு. தமிழுக்குள் பனைகளின் முலையெனத் திரண்ட மொழி வெய்யிலினுடையது. பனைகள் நெடிது நிற்பவை, இரண்டு காதுகளில் இரண்டு கலயங்கள் தொங்கும் பனை, முதுதாயின் தோற்றம் கொண்டது, வடலிகள் சிறு கரங்கள் நீட்டி விளையாட்டுடன் வளர்பவை. பனை என்பது முழுதும் நல்லது என்பதன் குறியீடு. ஈழம் பனைகளின் வெளி. இந்த நிலத்திலும் நின்றுயிர்க்கும் பனைகளில் ஓங்கி நிமிரும் கனவென வெய்யிலின் …

இளங் கோதல்

மொழிக்குள் துணிச்சலுடன் நுழைந்து விட்ட திருடனொருவன் அதன் யாருமறியாத பொக்கிஷங்களை அள்ளித் தன் குகைக்குள் சேர்ப்பது போல் தமிழுக்குள் நுழைந்த கள்வன் இசை. அநாயசமான தோற்றம் கொண்ட எளிமையான கள்வன் என்ற தோற்றமே இசையின் கவிதைகளை வாசிக்கும் போது எழுவது. இன்னொரு தருணத்தில் மொழிக்குள் புகுந்து அதன் உடலைக் கோதிவிடும் இளங்கோதலின் சிலிர்ப்பு. நவீன தமிழ்க் கவிதையில் கொஞ்சம் அசால்டான தேர்ந்த பஸ் ட்ரைவரின் பாடல் தெரிவுகள் போல் நுட்பமும் …

கண்ணீர் மிக்க ஒளியுடையது

ஈழக் கவிதைகளின் மொழியுள் தேச விடுதலை என்ற கனவுடன் எழுந்த கவிஞர்களில் அக்காலம் முழுவதிலும் அதன் பின்னரும் சக பயணியாயும் சாட்சியாயும் எழுதப்பட்ட கவிதைகள் கருணாகரனுடையவை. அவரது மொழி தளும்பும் குடத்தின் நீராட்டம் போன்றது. அதற்குள் எப்பொழுதும் முடிவுறாத குற்றவுணர்ச்சிகளினதும் பொறுப்பேற்றலினதும் குரல் தளும்பிக்கொண்டேயிருக்கும். உறுதியான நம்பிக்கைகள் எரியும், பின்னர் அது நீறாகும், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அவரது கவிதைகள் தொடர்ந்து அலைந்து கொண்டேயிருக்கும். குற்றவுணர்ச்சியின் முனைகள் மொழியுள் முளைக்கும் …

புலிக்கு அதன் உடலே கானகம்

பெண் தன்னிலை தன் இருப்பின் திறவுகளுக்கு மொழியின் பிரக்ஞ்ஞையில் அறுக்க வேண்டிய தளைகளை, கவிதை ஒரு தோட்டக்காரரைப் போல் தேவையற்றதை வெட்டி, தேவையானவற்றைப் பராமரித்து நீரூற்றிப் பாதுகாத்து வருகிறது. மொழிக்குள் பெண் குரல்கள் தனது வாழ்வின் ஆதார விசைகளின் உந்துதலை தன் உடல் களைய வேண்டிய புனிதங்களை உள்ளம் பொருள் கொள்ள வேண்டிய தன்னிலைகளை முன்வைத்தபடியே நகர்ந்து வருகிறது. குட்டி ரேவதி மொழிக்குள் நுழைந்த காலம் தொடக்கம் மொழியின் ஈரலிப்பை …

பொன் வாள்

மொழிக்குள் சில கவிஞர்கள் அரிதான ஒருங்கிணைவுகளைப் பெறுவார்கள். ஒரு மக்கள் திரளின் கூட்டு மனத்தின் பொன் வாளென அவர்களது கவிதைகள் திரண்டு வருவன. அவை போருக்குரியவை அல்ல. அம்மக்களின் அகத்தின் ஒவ்வொரு இழைகளும் நுட்பங்களும் உருகித் தங்கமென வழிந்து, பரவி, இறுகி, பிடியிடப்பட்டு, கூர் தீட்டப்பட்டு தகதவென மின்னி உறைபவை. சேரன் ஈழத்தின் நிலத்தையும் அகத்தையும் மொழியுள் திகழ வைத்தவர். அவரின் நிலக்காட்சிகளின் அவதானிப்புகள் பலநூறு வரிகளின் மூலம் ஈழத்தை …

ஒரு குட்டி நட்சத்திரம்

மொழிக்குள் அரசியல் பிரக்ஞை உள்நுழைவது கத்தியால் அதன் இதயத்தைக் கீறி அதை மீளத் தைப்பதைப் போன்றது. அதன்பின் அதுவரையான மொழியுடல் வெட்டப்பட்ட மரமொன்று மீளத்துளிர்ப்பதைப் போல, மெல்ல மெல்ல வளர ஆரம்பிக்கின்றது. சிவரமணியின் கவிதைகள் மொழிக்குள் சீழ்பிடித்திருந்த ஆணாதிக்க சமூக ஒழுங்கைக் கத்தியால் வெட்டியகற்றும் எத்தனமும் கூர்மையும் கவித்துவ ஒருமையும் கூடியவை. பெண்ணுளம் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிகளை தன் கவித்துவ வீச்சால் சொக்கப்பனை கொழுத்த முன் இரண்டே வெட்டில் மூன்றாய் …

நூல் பிறையளவு கொடை

கசந்து வெண்ணிறமாகப் புன்னகைக்கும் மொழி பிரான்சிஸ் கிருபாவினுடையது. மொழி ஒரு கோப்பை வைன் என்றால் அதன் ஆயிராமாண்டு காலத் துயர் பிரான்சிஸின் சொற்களில் வடியும் கைப்பு. வாழ்வின் உவர்ப்பளிக்கும் அந்தரத்துடன் கத்திக் கொண்டு எதிர்ப்படும் மொழி, பைத்தியம் நிறை சொற்களால் இன்னொரு அகத்தை கையில் பற்றி உலுப்பி அறைந்து நீதி கேட்பவை. நீங்கள் ஏன் என்னைக் கைவிட்டீர் என்று ஒவ்வொரு கைவிடலுக்கும் ஒவ்வொரு விலக்கத்திற்கும் காரணம் கேட்பவை. பின்னர் தன்னைத் …

எரியும் ஒரு பிடிப் பிரபஞ்சம்

மனதின் உள்ளிணைவுகள் தீவிரங் கொண்டு மொழியை மோதுகையில் சிதறும் நட்சத்திரத் தீற்றல்கள் என மொழியில் பட்டுத் தெறித்தவை பிரமிளின் கவிதைகள். பிரபஞ்சம் என்பது ஓர் பருவெளி. அதன் நிறக்கோலங்கள், கருவிடை வெளிகள், காலங்கள் அமிழாமல் உறையும் துளைகள், தூசுகள், கிரகப் பாறைகள் என்று அளவிலாத பருக்களின் விரிவெளியெனப் பரந்து நிற்பது அது. மனித மனத்தின் உட்சாரமும் பிரபஞ்சத்தின் பருச்சாரமும் ஒன்றின் இன்னொரு வடிவங்களென ஆகுவது இத்தன்மைகளாற் தான். பிரமிள் மொழிக்கூட்டின் …