89: களியிலாடு மயில்
அருள்வதும் மருள்வதும் பெண்ணின் இயற்கை. வளர்வதும் பொலிவதும் போல. தானகி தன் நினைவுகளின் இனிமைகள் அனைத்தும் நிலவையின் உடனிருத்தலில் எங்கனம் பூத்து மகிழ்ந்தன என எண்ணிக் கொண்டாள். அரசியினருகில் துயிலும் தோழியென்றாகி வாழ்பவள். சொல்லிலும் மெளனத்திலும் மெல்லிய அசைவிலும் கூட அவளை அறிந்தவள். நிலவை பெண் கூர் கொண்ட உச்சம். விழைவும் அறிவும் ஞானமும் திரண்ட பேருரு. காலத்தின் சங்கிலி. வாழ்வின் திகைப்பு. முதல் நாள் களியிரவில் மந்தணமாய்க் களி …
